சென்னை: திமுக, பாஜகவைத் தவிர மற்ற கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக ஒரு தகவல் உலா வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக உள்கட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளதாகவும், அதே நேரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்வதற்கும் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும் என்றும், திமுக, பாஜகவைத் தவிர மற்ற கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டும் இன்றி வரும் 2026 தேர்தலில் போது கூட்டணியில் மாற்றம் இருக்கலாம் என கூறியதாகவும் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தவெக தலைவர் விஜய்யின் மாநாட்டில் திமுக, பாஜக கட்சிகளை விமர்சனம் செய்த விஜய் ஏன் அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக சிறப்பாக செயல்பட்டதால் தான் விஜய் விமர்சனம் செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக மற்றும் பாஜகவை தவிர மற்ற கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று எடப்பாடி தெரிவித்திருப்பது, கூட்டணிக்கான நகர்வாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபக்கம் விஜய்யுடன், அதிமுக தரப்பில் ஏற்கனவே பேசி முடித்து விட்டதாகவும், எல்லாம் பேசி முடித்து விட்டதால்தான் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போட்ட பூடகமான ட்வீட்டையும் சிலர் மேற்கோள் காட்டுகின்றனர்.
அந்த அடிப்படையில் பார்த்தால் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் தவெக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}