"எங்களுக்கு இப்பவே தீபாவளி".. கொண்டாடும் அதிமுக.. இவ்வளவு சந்தோஷமா?!

Sep 25, 2023,06:49 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் பாஜக கூட்டணி முறிவை திருவிழா போல கொண்டாடிக் கொண்டுள்ளனர். இப்பவே எங்களுக்கு தீபாவளி வந்துருச்சு என்று அவர்கள் கொண்டாடுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.


ஒரு கூட்டணி உருவாகும்போதுதான் அதைக் கொண்டாடுவார்கள். குறிப்பாக ஜெயலலிதாவுடன் முதல் முறையாக தேமுதிக கூட்டணி வைத்தபோது அதை இரு கட்சியினரும் அப்படிக் கொண்டாடித் தீர்த்தனர். தேமுதிகவினரை விட அதிமுகவினர்தான் அதிகமாக கொண்டாடினார்கள்.




இப்போது அதே அளவிலான கொண்டாட்டத்தை பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இது வித்தியாசமாக இருக்கிறது. எந்த ஒரு கூட்டணி முறிவையும் தமிழ்நாடு கொண்டாடி இதுவரை பார்த்ததில்லை என்பதால் மக்களுக்கும் கூட இது ஆச்சரியமாகவே இருக்கிறது.


இந்த அளவுக்குக் கொண்டாடுகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அவர்கள் சிரமப்பட்டுள்ளனர், கஷ்டப்பட்டுள்ளனர் என்றுதானே அர்த்தம் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.  அதிமுகவினரும் கூட இதையே தெரிவிக்கின்றனர்.


பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில்,லேடியா மோடியா என்று கேட்ட கட்சி இது. எங்களால்தான் வளர்ந்தது பாஜக. எங்களது அம்மாவையே அவமானப்படுத்திப் பேசிய அண்ணாமலையை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இனி பாருங்க எங்களோட செயல்பாடுகளை என்று ஆவேசமாக கூறினார்.


இன்னொரு தொண்டர் கூறுகையில், எங்களால்தான் பாஜகவுக்கு வலிமையே கிடைத்தது. நாங்கள் கூட்டம் நடத்தும் போதெல்லாம் பத்தே பத்து பாஜகவினர்தான் வருவார்கள். கையில் பெரிய சைஸ் கொடியை மட்டுமே கொண்டு வருவார்கள்.. கூட்டம் நாங்கள் தான். இதுதான் அவர்களின் பலம். அவர்களால்தான் கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சியை இழந்தோம். இனி வரும் நாடாளுமன்றத்தில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். அதை அனைவரும் பார்ப்பீர்கள் என்றார்.


#நன்றி_மீண்டும்வராதீர்கள்


சமூக வலைதளங்களிலும் கூட  #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை அதிமுகவினர் டிரண்ட் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் விதம் விதமாக இந்தப் பிரிவைக் கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகின்றனர்.


வழக்கமாக தேர்தல் வெற்றியின்போதுதான் அதிமுகவினர் இப்படி வெறித்தனமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இப்போது அவர்கள் கொண்டாடுவதைப் பார்த்து தமிழ்நாடே ஆச்சரியமாகப் பார்க்கிறது.




சமீபத்திய செய்திகள்

news

பசங்களா இன்னிக்கு ஜெயிச்சிருவீங்கள்ள.. சேப்பாக்கத்தில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மஞ்சள் படை!

news

சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர்: கே.பி.முனுசாமி கடும் தாக்கு!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்