சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதற்குப் பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையானவர் என்று பாராட்டினார். இதையடுத்து தீர்மானம் மீது 2 முறை குரல் வாக்கெடுப்பும், பின்னர் டிவிஷன் வாக்கெடுப்பும் நடைபெற்றது. அனைத்திலும் தீர்மானம் தோல்வியடைந்தது.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து சனிக்கிழமை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 17ஆம் தேதி ஆன இன்று பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதம் தொடங்கும். நான்கு அல்லது ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கருத்துக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். பின்னர் துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.
அந்த வரிசையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை அவையை திருக்குறளை வாசித்து சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.எல் ஏ.,க்கள், டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பிறகு கேள்வி அலுவல் நேரம் நடைபெற்றது.
கேள்வி நேரம் முடிவடைந்ததும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சபாநாயகர் பதவியிலிருந்து அப்பாவுவை நீக்க கோரி, அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் கொடுத்திருந்தார்.
இதையடுத்து இன்று அது விவாதத்துக்கு வந்தது. விவாதத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியை நடத்துமாறு கேட்டுக் கொண்ட அப்பாவு அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து விவாதம் தொடங்கியது. விவாதத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, சபாநாயகர் அப்பாவு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். குறிப்பாக சபை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய சபாநாயகர் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.
விவாதத்திற்குப் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார். அப்போது சபாநாயகர் அப்பாவுக்கு அவர் புகழாரம் சூட்டினார். இதற்கு முன்பு இருந்த சபாநாயகர்களை விட இப்போது உள்ள சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார். அரசு மீது குற்றம் குறை காண முடியாதவர்கள் சபாநாயகர் மீது குறை சொல்கிறார்கள். அதிமுக ஆட்சியில் சபாநாயகர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை நாடறியும். சபாநாயகர் அப்பாவு ஜனநாயக ரீதியாக செயல்படக் கூடியவர்.. அவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அறிந்து நான் வருத்தமடைந்தேன் என்று பேசினார் முதல்வர்.
குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி
முதல்வர் பதிலுரைக்குப் பின்னர் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது டிவிஷன் வாக்கெடுப்புக்கு அதிமுக தரப்பு கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்டசபை அரங்க வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்றது.
டிவிஷன் வாக்கெடுப்பின்படி ஒவ்வொரு உறுப்பினரின் பெயரும் கூப்பிடப்படும். அவர் எழுந்து தீர்மானத்திற்கு ஆதரவா இல்லையா என்பதை உணர்த்தும் வகையில் ஆம், இல்லை என்ற பதிலைச் சொல்வார். இப்படி ஒவ்வொரு உறுப்பினராக எண்ணி ஆதரவு கணக்கிடப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். அதன்படி டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் தீர்மானத்துக்கு எதிராக 153 பேரும், ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமியுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள செங்கோட்டையன் ஆகியோர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}