- மஞ்சுளா தேவி
சென்னை: "என்னடா இது செம்ம.. ரஜினி மாதிரியே இருக்கே" என ஆச்சரியப்பட்டு, அதிசயப்பட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவரும்.. இந்த வீடியோ காட்சியைப் பார்த்து!
அந்த அளவுக்கு அச்சு அசலாக ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா போலவே ஒரு ஜோடி நடித்த வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. இது ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுன்னணறிவு மூலம் உருவாக்கப்பட்ட காட்சிதான் என்றாலும் கூட படு தத்ரூபமாக இருக்கிறது.
அந்தக் காலம் முதல் இப்போது வரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பை பிடிக்காத எவரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை பிடித்த நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் நின்னா ஸ்டைல், உட்கார்ந்தா ஸ்டைல், பேசினா ஸ்டைல், நடந்தா ஸ்டைல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ரஜினியுடைய நடிப்பு மிகவும் ஸ்டைலாகவும், சும்மா மாஸாகவும் இருக்கும். தனக்கென்று தனித் தன்மையை கொண்ட இவருடைய நடிப்பிற்கு இன்று வரை ஏகப்பட்ட மவுசு உள்ளது. அண்மையில் வெளிவந்த ஜெயிலர் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து 170வது படத்தைத் தொடங்கி விட்டார் ரஜினிகாந்த்.
ரஜினி போலவே ரசிகர்களை காந்தமென ஈர்த்த இன்னொருவர் யார் என்றால் சில்க் ஸ்மிதாதான். மறைந்த சில்க் ஸ்மிதா திரைத்துறையில் 1970 இல் ஒரு ஒப்பனை கலைஞராக அறிமுகமானார். இவர் முதன் முறையாக வண்டி சக்கரம் என்ற படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்தார் .அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தது. 80 ,90களில் கவர்ச்சி நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களிலும் வலம் வந்தவர். இவருடைய வசீகரிக்கும் முகம், கவர்ந்திழுக்கும் கண்கள், நீளமான தலைமுடி என அனைத்தும் கவனிக்கப்பட்டன. இவருகென்றே தனி ரசிகர் பட்டாளம் இன்று வரை உள்ளது. சமீபத்தில் வந்த மார்க் ஆண்டனி படத்தில் சில்க் போன்ற தோற்றம் உடையவர் வந்ததற்கே தியேட்டரே அதிர்ந்தது. அப்படிப்பட்ட கிரேஸ் சில்க்குக்கு உண்டு.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினி மற்றும் சில்க் ஸ்மிதா போல ஒரு ஜோடி தங்களின் தோற்றத்தை மாற்றிய வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் காட்டுத் தீ போல இது பரவி விட்டது. யாருங்க இது என்று பலரும் ஆச்சரியப்பட்டு இதை ரசித்துக் கொண்டுள்ளனர்.
ஏ ஐ தொழில்நுட்பம் என சொல்லக்கூடிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ரஜினி மற்றும் சில்க் ஸ்மிதா உருவம்தான் இது. அதாவது உடல் வேறு முகம் வேறு. இந்த தத்ரூபமான ஜோடி தற்போது வைரலாகி வருவதுடன் பிரபலம் அடைந்து வருகிறது. இவர்கள் இருவரின் முகங்களும் அச்சு அசலாக ரஜினி மற்றும் சில்க் ஸ்மிதா போல உள்ளது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர்களை வைத்து நிறைய ரஜினி படம் எடுக்கலாம் என ரஜினி ரசிகர்கள் சிலாகித்துச் சொல்கிறார்கள்.
இதில் ரஜினி உருவத்தில் வரும் நபரின் ஹேர் ஸ்டைல், முகபாவனை, உடல் அமைப்பு, உயரம் போன்றவை மிகவும் தத்ரூபமாக பொருந்தி உள்ளது. அதேபோல அந்தப் பெண்ணுக்கும் சில்க் முகம் சூப்பராக பொருந்தி வருகிறது. உண்மையாகவே அறிவியல் வளர்ச்சியில் ஏ ஐ தொழில்நுட்பம் என்பது ஒரு மிகப்பெரிய புரட்சிதான். செயற்கைக நுண்ணறிவின் தந்தை ஜான் மெக்கார்த்தி. இவர் ஒரு அமெரிக்க கணினி விஞ்ஞானி ஆவார். இந்த வளர்ச்சி காலத்தின் தேவைக்கேற்ற ஒன்றாக திகழ்கிறது. மனிதர்கள் செய்யும் வேலைகளை செய்யக்கூடிய அளவிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.
தற்போது ஏ ஐ தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக பிரபலமாகி விட்டது. எல்லாத் துறைகளிலும் இது நுழைந்து விட்டது. சாத்தியமில்லாதவற்றையும் கூட, ஏ ஐ தொழில்நுட்ப மூலம் சாத்தியப்படுத்த முடியும். ஏ ஐ தொழில் நுட்பபத்தை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி குரலில் தமிழ் பாடல்கள் பாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் ரஜினி மற்றும் சில்க் ஸ்மிதா தோற்றத்தை கொண்ட ஒரு ஜோடியின் வீடியோ தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் . நீங்களும் இதைப் பார்த்து ரசிங்க.
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
{{comments.comment}}