டெல்லி: வேளாண்மை திட்டங்களில் டிஜிட்டல் முறையை பயன்படுத்தி விரைவில் இந்திய விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விவசாயிகளின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அவர்கள் விவசாய பணியை தடையின்றி செய்தால் மட்டுமே நாம் அனைவரும் வாழ முடியும். இருப்பினும் மழை, வெள்ளம், சூறாவளி காற்று போன்ற இயற்கை பேரிடர்களால் பயிர்கள் பல சேதங்களை சந்திக்கின்றன. இதனை சரி செய்ய விவசாயிகள் வங்கி கடன் வாங்கி விவசாய பணியை ஈடு செய்து வருகின்றனர். இருப்பினும் விவசாயிகள் லாபத்தை ஈட்ட முடியாமல் நஷ்டத்தை சந்தித்து விடுகின்றனர்.
இந்த சூழ்நிலை காரணமாக மத்திய அரசு விவசாயிகளுக்காக விவசாயம் தொடர்பான பல்வேறு உதவிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பயிர் காப்பீடு, பயிர் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்குவதற்கான மானியம், விவசாய கடன், தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களுக்காக மத்திய அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் வேளாண்மை தொழில்நுட்ப உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் தற்போது மத்திய அரசு விவசாயிகளுக்கான சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி வேளாண்மை சார்ந்த திட்டங்களுக்கு டிஜிட்டல் முறையை பயன்படுத்தி விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டையை வழங்கப்பட உள்ளது.இந்த அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து மத்திய வேளாண்துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி கூறியதாவது,
விவசாயிகள் நலனுக்காக ரூ.2 ஆயிரத்து 817 கோடி ஒதுக்கீட்டில் டிஜிட்டல் வேளாண்மை திட்டத்துக்கு கடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. விவசாயத்துறை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் விவசாயிகளை பதிவு செய்யும் பணி தொடங்க உள்ளது. ஏனெனில் தற்போதைய நிலையில், விவசாயிகள் ஏதேனும் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு தடவையும் அவர் விவசாயி தானா, என்ன விவசாயம் செய்கிறார் என்பதை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு கணிசமான நேரம் மற்றும் செலவு ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண விவசாயிகள் பதிவேடு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.அதற்காக நாடு முழுவதும் விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிட்டல் மயமாக்கி விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அக்டோபர் மாதம், பதிவு செய்யும் பணி தொடங்கும். இதற்காக முகாம்கள் நாடு முழுவதும் நடத்தப்படும். மார்ச் மாதத்துக்குள் 5 கோடி விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி ஆதார் போல், விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் பல்வேறு வேளாண் திட்டங்களை எளிதாக பெற முடியும். விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட திட்டங்களை பெற முடியும். அரசு சார்பில் விவசாயிகளின் தேவைகளுக்காக திட்டமிடவும், முடிவு செய்யவும் இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}