ஆக்ரா : மனைவி தன்னுடைய விருப்பப்படி புடவை கட்டுவதில்லை என்பதற்காக விவாகரத்து கேட்டு கோர்ட்டிற்கு சென்றுள்ளார் ஆக்ராவை சேர்ந்த கணவர் ஒருவர். இந்த விசித்தி வழக்கு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆக்ராவை சேர்ந்த தீபக் என்பவர், உத்திர பிரதேசம் ஹதராஸ் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொழண்டுள்ளார். தீபக் தன்னுடைய மனைவிக்கு விதவிதமான நிறைய புடவைகள் வாங்கி வந்து கொடுத்துள்ளார். ஆனால் தீபக் வாங்கி வரும் புடவைகள் எதுவும் அவரது மனைவிக்கு பிடிக்காததால் அந்த புடவைகளை கட்டுவதற்கு அவர் மறுத்து வந்துள்ளார். தான் வாங்கி வந்த புடவைகளை கட்டும் படி தீபக் பலமுறை வற்புறுத்தியும், அவற்றை கட்ட மறுத்து அவரது மனைவி பிடிவாதமாக இருந்துள்ளார். அதோடு தன்னுடைய விருப்பத்தின் படியே புடவைகளை அவர் அணிந்து வந்துள்ளார்.
புடவை காரணமாக அடிக்கடி தீபக்கிற்கும் அவரது மனைவிக்கு தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை தொடர்ந்ததால் இருவரும் முதலில் குடும்ப நல ஆலோசகரிடம் கவுன்சிலிங் சென்றுள்ளனர். ஆனால் அவர்களாலும் இந்த தம்பதியை சமாதானம் செய்து வைக்க முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வும் ஏற்படவில்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் பிரிந்த வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களை மீண்டும் ஒன்று சேர்த்து வைக்க இருவரின் குடும்பத்தினர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.
இறுதியாக தீபக்கும் அவரது மனைவியும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதோடு ஆக்ரா கோர்ட்டில் விவாகரத்து மனுவும் தாக்கல் செய்துள்ளனர். இந்த விவாகரத்து வழக்கு இந்த மாதம் விசாரைணக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற பல வழக்குகள் வந்து கொண்டிருப்பதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. புடவையை போல் மொமுசிற்காகவும் கணவன்-மனைவி விவாகரத்து வரை சென்ற தம்பதிகளும் இருக்கிறார்களாம். பெண் ஒருவர் திருமணத்திற்கு முன் தினமும் மொமுஸ் சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஷூ பேக்டரி ஒன்றில் பணியாற்றும் கணவரால் தினமும் மொமுஸ் வாங்கித் தர முடியவில்லையாம். எப்போதாவது தான் அவர் வாங்கி கொடுத்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்து, இருவரும் விவாகரத்து வரை சென்றுள்ளனர். நல்ல வேளையாக குடும்ப நல ஆலோசகர்கள் வழங்கிய கவுன்சிலிங்கில், வாரத்திற்கு 3 நாட்கள் மொமுஸ் வாங்கி தர வேண்டும் என டீல் பேசி, இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}