ரத்தினத்தை முடித்த கையோடு.. விஷால்.. விஸ்வரூபம் எடுக்கக் காத்திருக்கும்.. துப்பறிவாளன் 2!

Mar 09, 2024,08:09 PM IST

- அஸ்வின்


சமீபத்தில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ரத்தினம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால் இயக்குனர் ஹரி கூட்டணி மீண்டும் இணைந்து உள்ளது. இந்த படத்தில் மேலும் வலு சேர்க்கும் விதமாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் ஒரு அதிக பலம் என்று நாம் கருதலாம். 


விஷால், செல்லமே திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகம் ஆனவர். அவர் செல்லமே, சண்டக்கோழி, சிவப்பதிகாரம், திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் ஒரு நடிகராக கோலோச்சி நிற்பதற்கு ஹரி, லிங்குசாமி, சுசீந்திரன் ஆகியோர் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறார்கள். 




ஹரி இயக்கத்தில் தொடர்ந்து மூன்று திரைப்படங்கள், லிங்குசாமி இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள். இந்த இரண்டு இயக்குனர்களின் கூட்டணியுமே அவருக்கு மிகுந்த வெற்றியை தந்துள்ளது. தொடர்ந்து குடும்ப பாங்கான கதைகளை இயக்கி வரும் இயக்குனர் ஹரியுடன் அவர் இணைந்த இரண்டு திரைப்படங்களும் அவரை  ஒரு வசூல் சக்கரவர்த்தியாக அவருக்கு அடையாளம் கொடுத்துள்ளது. மேலும் அவரது வித்தியாசமான நடிப்பில் வந்த லத்தீசார்ஜ், சக்கரா, மிஸ்கின் இயக்கத்தில் அவர் நடித்த துப்பறிவாளன் முதல் பாகம் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு ஒரு அதிரடி நயாகனாக ஒரு அடையாளம் கொடுத்து உள்ளது.


மேலும் மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்த இரும்புத்திரை, அவருக்கு நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை காட்டியுள்ளது என்று நாம் சொல்லலாம். இந்த நிலையில், விஷால் ஒரு இயக்குனராக, துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். நடிகர் அர்ஜூனிடம் ஏழுமலை படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார் விஷால். எனவே ஆரம்பத்திலேயே இயக்குநராகும் ஆர்வம் அவரிடம் இருந்தது. அதன் வெளிப்பாடாகவே தற்போது துப்பறிவாளன் 2ம் பாகத்தை அவரே இயக்கப் போகிறார்.


இயக்குநராக அவதாரம் எடுக்கும் விஷால்





அவர் ஒரு தயாரிப்பாளராக பாண்டியநாடு திரைப்படத்தில் ஒரு வெற்றிப் பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு முதல் முறையாக துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதை உறுதி செய்துள்ளார். துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் அவர் இணைந்து நடித்தது பிரசன்னாவுக்கும் அவருக்கும் மிகுந்த ஒரு வெற்றியை கொடுத்தது. இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தது அவருக்கு பெரிய பிரேக்கைக் கொடுத்தது. அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் சமூக கருத்துக்களை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல சொல்லியது. 

விஷால் ஒரு கட்டத்தில் நேரடி அரசியலிலும் ஒரு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். ஏனென்றால் 2015 அவர் நடிகராக வெற்றி படங்களை கொடுத்து வந்தபொழுது அவர் நடிகர் சங்கத்தில் போட்டியிட்டார். அவரது தலைமையில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. ஒரு இளைஞனாக என்ன என்ன பணிகளை செய்ய முடியுமா அந்த பணிகள் எல்லாவற்றையும் விஷால் சிறப்பாக செய்து வருகிறார். அவரது கலை பயணத்திலும் சரி, பொதுவாழ்விலும் சரி சிறந்து விளங்கி வருகிறார். 

அனல் பறக்கும் ரத்தினம்



தற்போது நடித்து வரும் ரத்தினம் திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் தான் வெளியானது. பாடலை கேட்கும் பொழுது அனல் பறக்கும் இசையுடன் உக்கிரமான வரிகளுடன் அந்தப் பாடல், படம் குறித்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு ஆம்பளை, திமிரு, ஒரு தாமிரபரணி, ஒரு மலைக்கோட்டை, ஒரு தோரணை, ஒரு வெடி...  வெடி திரைப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருப்பார். லத்தி படத்தில் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் ஆக அனைவரின் மனதையும் கவர்ந்திருப்பார். அதேபோல ஆம்பள படத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார் விஷால். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் விஷால், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு துப்பறிவாளன் என்று சொல்லலாம்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் சென்ற வருடத்தின் 100 கோடி ரூபாய் வசூல் திரைப்படங்களில் ஒன்றாக இடம் பெற்றது. இதுதான் விஷால் கெரியரிலேயே முதல் 100 கோடிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் படத்தில் மட்டும் கிடையாது நிஜத்திலும் ஒரு துப்பறிவாளர்தான். நுணுக்கமான கதைகளையும் நல்ல நல்ல இயக்குனர்களையும் அடையாளப்படுத்துவது விஷாலின் ஸ்டைல். அவர் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரது எல்லா படத்திலும் அவர் பேசும் பஞ்ச் வசனங்கள் நம் எல்லார் மனதிலும்  இடம் பிடித்துள்ளது. குறிப்பாக சண்டக்கோழி திரைப்படத்தின் முதல் பாகத்தில் அவர் நடிகர் லாலிடம்  பேசும் அந்த பஞ்ச் வசனம் "இங்கே தான் இருப்பேன் இந்த மண்ணில் தான் இருப்பேன்.. தொட முடிஞ்சா தொட்டுக்கோ.. வீச முடிஞ்சா வீசிக்கோ" என்று அவர் பேசின வசனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

லிங்குசாமியும் ஹரியும் மற்றும் விஷாலும்



செல்லமே, சண்டக்கோழி, சிவப்பதிகாரம், தாமிரபரணி, திமிரு, மலைக்கோட்டை, சத்தியம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை என விஷாலின் ஹிட்டுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.. தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் மிகப்பெரிய குறும்புக்கார இளைஞனாக வலம் வந்திருப்பார். வெடி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நம் அனைவரின் கவனத்தை ஈர்த்திருப்பார். அவன் இவன் திரைப்படத்தில் ஒரு கிராமத்து இளைஞனாக நம் மனதில் புகுந்திருப்பார்.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவரது வாழ்வில் சறுக்கல்கள் வந்த பொழுது ஒரு தயாரிப்பாளராக நின்றார், பாண்டியநாடு திரைப்படம் வந்து முழுக்க முழுக்க கமர்சியல் பார்முலாவில் எடுக்கப்பட்ட படம். அவரது மார்க்கெட் ரேஞ்சை உயர்த்த பெரிதும் உதவியது. 

எப்படி லிங்குசாமியும் ஹரியும் விஷால்  கெரியருக்கு உயிர் கொடுத்தார்களோ அதை மீண்டும் அவருக்கு திருப்பி கொடுத்தது இயக்குனர் சுசீந்திரன் என்று சொல்லலாம். பாண்டியநாடு திரைப்படம், பாயும் புலி திரைப்படம் அவரது கெரியரில் ஒரு அசைக்க முடியாத வெற்றியாக, இயக்குனர் சுசீந்திரன் அவருக்கு கொடுத்தார். இந்த மாதிரி  சொல்லிக் கொண்டே போகலாம். மருது திரைப்படத்தில் முத்தையா விஷாலை, ஒரு மிகப்பெரிய ஒரு கிராமத்து இளைஞனாக, நடிக்க வைத்து அவரை அழகு படுத்தியிருப்பார். கிராமத்து திரைப்படங்கள் என்றாலே நமக்கு சலிப்பு ஏற்படுத்தும். ஆனால் ஒரு நாயகனாக முழு திரைப்படத்தையும் ஹோல்ட் செய்வது அப்படிங்கிறது கடினம். கிராமத்து திரைப்படம் என்று எடுத்தாலே அதற்கு வசனம் அந்த வசன உச்சரிப்பு எல்லாம் இயல்பாக இருக்க வேண்டும். அது மருது திரைப்படத்தில் மிகவும் தத்ரூபமாக விஷால் பேசியிருப்பார். 

துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை அனைவருமே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும், ஒரு இயக்குநராக. ஹரி போன்ற இயக்குனர்கள் அவருடன் திரும்பத் திரும்ப பணியாற்றி, அவருக்கும் ஹிட் கொடுக்க வேண்டும்.. விஷாலுக்கும் அவரது படங்களை ஹிட்டாக்க வேண்டும்.. அப்போதுதான் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்து கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்