பரபரப்பு வீடியோவிற்கு பின்...இன்று முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு...என்ன நடக்கும்?

Sep 16, 2024,10:45 AM IST

சென்னை : ஆட்சியின் பங்கு வேண்டும் என பேசி பரபரப்பு வீடியோ வெளியிட்ட பிறகு, இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்று சந்திக்க உள்ளார். இதனால் தமிழக அரசியலில் அடுத்த என்ன நடக்கும் என அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, இரண்டு எம்.பி.,க்களை லோக்சபாவில் பெற்றது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வென்று பெற்ற பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இதே கூட்டணியுடன் 2026ம் ஆண்டு வர இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கும் தயாராக திமுக தலைமை திட்டமிட்டிருந்தது.  இதற்கான வேலைகளையும் திமுக ஏற்கனவே துவங்கி விட்டது.





இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசிக தலைவர் தொல் திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கேட்டு தான் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டார். இரண்டு முறை இந்த வீடியோவை பதிவிட்டு, பிறகு இரண்ட முறை டெலிட் செய்தார். அதற்குள் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவ துவங்கி விட்டது. மீடியாக்களிலும் இதே பேச்சாக தான் இருந்தது. அதற்கு முன்பு தான், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக.,வை கலந்து கொள்ள வருமாறு விசிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 

திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, எதிர்க்கட்சியான அதிமுக.,விற்கு அழைத்த போதே, திமுக-விசிக கூட்டணியில் பிளவு, உரசல் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு கிளம்பியது. ஆனால் அதற்கு விளக்கம் சொல்லி விசிக சமாளித்தது. அதிமுக.,விற்கு அழைப்பு விடுத்த அடுத்த இரண்டாவது நாளில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு திருமாவளவனே வீடியோ வெளியிட்டதால், திமுக-விசிக கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கும் தகவல் உண்மை தான் என பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர துவங்கினர்.

திமுக-விசிக கூட்டணி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் முதல் முறையாக சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது இவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள்? கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் ஏதாவது எடுப்பார்களா? என்பது போன்ற பலவிதமான கேள்விகள் தமிழக அரசியலில் எழுந்துள்ளது. ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் பட்சத்தில் அதிமுக.,வுடன் அவர் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்