கூகுள், அமேசானை தொடர்ந்து "நைக்".. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மொத்தமாக நீக்கம்!

Feb 17, 2024,05:20 PM IST

நியூயார்க் : அமெரிக்காவின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் அதிக அளவிலான பணியாளர்களை ஒரே நேரத்தில் வேலையை விட்டு தூக்கி, இந்த ஆண்டு துவங்கியது முதலே அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகின்றன. 


82,307 பணியிடங்களை குறைக்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க கம்பெனிகள் கடந்த மாதம் அறிவித்தன. ஆனால் 2023ம் ஆண்டின் டிசம்பர் மாதம் முதலே ஆட்குறைப்பு என்பதை பாரபட்சம் இன்றி அனைத்து கார்ப்பரேட் கம்பெனிகளும் துவங்கி விட்டன.


2009 ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிறகு அதிக அளவில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது தற்போது தான். டிசம்பர் மாதம் முதல் இதுவரை 136 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக அளவிலான ஊழியர்களை பணிக்கு சேர்த்ததால் கம்பெனியின் செலவு அதிகரித்ததும், செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) போன்ற துறைகளில் அதிகம் முதலீடு செய்வதற்காகவும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.




டிஜிட்டல் அசிஸ்டென்ட், ஹார்டுவேர், இன்ஜினியரிங் டீம்களில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி உள்ள ஆல்ஃபபெட் கூகுள், செலவை குறைத்து, அதே சமயம் ஆர்டிபிசியல் இன்டலிஜன்சில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதே போல் அமேசான் நிறுவனமும் 2022,2023 ம் ஆண்டுகளில் மட்டும் 27,000 பேரை வேலையை விட்டு தூக்கி உள்ளது. பிளாக்ராக் 600, சிஸ்கோ சிஸ்டம் 85,000, மைக்ரோசாப்ட் 1900, மோர்கன் ஸ்டான்லே 40,000, பேபால் 2500 என்ற கணக்கில் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன.


இந்த வரிசையில் தற்போது முன்னணி ஷூ தயாரிப்பாளரான, நைக் நிறுவனமும் உலக அளவில் அதிக பணியாளர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. தற்போது உலக அளவில் நைக் நிறுவனத்தில் 83,700 பேர் பணியாற்றி வருகிறார்கள். மொத்தமாக 1600 வேலைகளை குறைக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். 


செலவை குறைப்பதற்காகவும், சந்தையில் போட்டியாளர்கள் அதிகரித்து விட்டதாலும் நைக் நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்களின் தேவை குறைந்து விட்டதாலும் இந்த முடிவை எடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உலக அளவில் எத்தனை ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளது என்ற விபரத்தை இந்த நிறுவனம் வெளியிடவில்லை.


நைக் நிறுவனமானது ஸ்போர்ட்ஸ் ஷூ தயாரிப்பில் மிகப் பிரபலமானது. அதேபோல பந்துகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பொருட்களையும் அது தயாரிக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.. பாலம் கடந்து வந்த பாதை!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்