சென்னை: 90களில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நாயகியாக நிழற்குடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. இவர் இயக்குனர் ராஜ்குமாரை திடீர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. சினிமா வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்தார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த கோலங்கள் தொடர் அனைவராலும் விருப்பி பார்க்கப்பட்டது.2018ம் ஆண்டு எழுமின் என்ற படத்தில் கதையின் நாயகியாக விவேகக்கின் ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் தற்பொழுது திரில்லர் படமான நிழற்குடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார்.
இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் என்பதனையும். அதனால், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன் மர்ம முடிச்சுகளுடன் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த ‘நிழற்குடை’ விரைவில் வெளிவர இருக்கிறது.சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ‘நிழற்குடை’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது ரிலீஸை நோக்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}