சென்னை: தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. நேற்று சர்ரென்று சூப்பராக விலை குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.53840க்கு விற்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். நகை விலை ஏற்றம் கண்டதால் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 22, 23 ஆகிய இரண்டு நாட்களும் தங்கம் விலை குறைந்திருந்தது. அதுவும் நேற்று ஒரு நாள் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 குறைந்திருந்தது. இந்த விலை குறைவால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் மட்டுமே நிலைத்தது பாஸ்! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்து விட்டது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால் மீண்டும் நகை வாங்குபவர்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நகை விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் தேவை மட்டும் அதிகரித்து கொண்டே வருவதினால் திருமண வைபவங்கள் வைத்துள்ளவர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
நகை விலை உயர்வு இன்னும் உயரவே வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்தும் தெரிவித்து வருவதால், செல்வந்தர்கள் நகைகளை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர். நகை வாங்கி சேமிப்பவர்களுக்கு இந்த விலை ஏற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6730 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.240 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,840 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7342 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.5873 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை...
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று 0.10 காசுகள் குறைந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 8.40 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 691 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.86.400 க்கு விற்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}