செயின்ட் வின்சென்ட்: ஒரு நாள் போட்டியில் உலக சாம்பியனாக வலம் வரும் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியாவை, டி20 உலகக் கோப்பைத் தொடரில் தோற்கடித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. அதுவும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தோல்வியை ஆஸ்திரேலியாவுக்கு அது கொடுத்துள்ளது.
இதனால் அரை இறுதிப் போட்டிக்கு தற்போது 3 அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு அணி இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தியா இதில் முதலிடத்தில் இருப்பதால் பெரிய அளவில் ஆபத்து இல்லை.
நடப்பு ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஏற்கனவே ஏகப்பட்ட அதிர்ச்சித் தோல்விகளை கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்தனர். வலுவான அணிகளையெல்லாம் சாதாரண அணிகள் தோற்கடித்து அதிர வைத்தன. குறிப்பாக பாகிஸ்தானை அமெரிக்கா தோற்கடித்து கதிகலங்க வைத்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி ஷாக் கொடுத்துள்ளது.
சூப்பர் 8 போட்டிகள் தற்போது மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து வருகின்றன. இதில் இந்தியா ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணி தற்போது, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளதால், இந்தியா அடுத்து வரும் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியாக வேண்டும். ஒரு வேளை தோல்வி அடைந்தாலும் கூட படு தோல்வி அடையாமல் மயிரிழையில் தோல்வி அடைய வேண்டும். அப்போதுதான் நமக்கு அரை இறுதிக்கான வாய்ப்பு உறுதியாகும். இந்தப் போட்டி நாளை செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது.
இந்தியா +2.425 என்ற ரன் ரேட்டுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா நமக்குப் பின்னால் +0.223 ரன் ரேட்டுடன் உள்ளது. 3வது இடத்தில் ஆப்கானிஸ்தான் -0.650 என்ற ரன் ரேட்டுடன் உள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் இந்தியாவை பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு குறைவுதான். ஒரு வேளை அப்படி நடந்து விட்டால் நமக்கு சிக்கலாகி விடும்.
எப்படி என்றால் ஆஸ்திரேலியாவுக்கு 151 என்ற வெற்றி இலக்கை இந்தியா நிர்ணயிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஸ்கோரை 14 ஓவர்களுக்குள் ஆஸ்திரேலியா எடுத்தாக வேண்டும். அதேபோல ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 190 ரன்கள் டார்கெட் வைக்கிறது என்று வைத்துக் கொண்டால், இந்தியா குறைந்தபட்சம் 150 ரன்களை எடுத்தால் கூட போதும்.. முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
மறுபக்கம் இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து, அடுத்து வரும் போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை தோற்கடித்து விட்டால், ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்குத் தகுதி பெற்று விடும். அப்படி நடந்தால் அது ஆப்கானிஸ்தானின் முதல் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி என்ற வரலாறு படைக்கும்.
புள்ளிகள் அடிப்படையில் குரூப் 1ல் இந்தியா 4 புள்ளிகளுடன், முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் இருக்கிறது. அதேபோல ஆப்கானிஸ்தானும் 2 புள்ளிகளுடன் உள்ளது. வங்கதேசம் இன்னும் வெற்றி பெறாமல் ஜீரோ புள்ளியுடன் உள்ளது. மறுபக்கம் குரூப் 2ல், தென் ஆப்பிரிக்கா 4 புள்ளிகள், மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. அமெரிக்கா புள்ளிகள் ஏதும் இன்றி உள்ளது. எல்லா அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி பாக்கி உள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}