சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லையில் சீட்.. 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி

Mar 21, 2024,10:38 PM IST

சென்னை: அதிமுகவின் 2வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தனி அணியாக போட்டியிடுகிறது. இந்த அணியில் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நேற்றுடன் முடிவடைந்தது.


இதில் தேமுதிகவுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி,கடலூர், திருச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை அதிமுக தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளது. புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என ஒதுக்கியது போக மீதம் உள்ள 33 தொகுதிகளிலும் அதிமுகவே களம் காண்கிறது. அதிமுக நேற்று தனது முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. 16 பேர் கொண்ட அந்த பட்டியலில் முக்கிய வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது.




அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி அதிக அளவில் எதுவும் இல்லை. தேமுதிக மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான கட்சியாக உள்ளது. பாமக  அதிமுக கூட்டணியில் சேரும்  என்று எதிர்பார்த்த நிலையில், பாமக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது அதிமுகவிற்கு இது பெரிய ஏமாற்றமாகி விட்டது என்றே செல்லலாம். கூட்டணியில் பெரிய கட்சிகள் என்று எதுவும் இல்லாததால் அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இன்று வெளியிடப்பட்ட அதிமுக 2வது வேட்பாளர் பட்டியல்


ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம்குமார்

வேலூர் - டாக்டர் பசுபதி

தருமபுரி - டாக்டர் அசோகன்

திருவண்ணாமலை - கலியபெருமாள்

கள்ளக்குறிச்சி - குமரகுரு

திருப்பூர் - அருணாச்சலம்

நீலகிரி (தனி)  - டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

கோயம்புத்தூர் - சிங்கை ஜி. ராமச்சந்திரன்

திருச்சி -  பி. கருப்பையா

பெரம்பலூர் - சந்திரமோகன்

மயிலாடுதுறை - டி.பாபு

சிவகங்கை - பனங்குடி சேவியர் தாஸ்

தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி

திருநெல்வேலி -  சிம்லா முத்துச்சோழன்

கன்னியகுமரி - முனைவர் பசுலியான் நஸ்ரேத்

புதுச்சேரி - தமிழ்வேந்தன்


விளவங்கோடு சட்டசபை  இடைத் தேர்தலில் அதிமுக சார்பில்  யு. ராணி களம் காண்பார் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்