ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல்குமார்.. தவெகவில் இணைந்தனர்.. விஜய் முன்னையில் சேர்ந்தனர்

Jan 31, 2025,06:53 PM IST

சென்னை: அதிமுக ஐடி விங் இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இன்று முறைப்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர்.


கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். தற்போது இக்கட்சி தொடங்கி ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தவெக தலைவர் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை மையமாக வைத்து அனைத்து பணிகளையும் விஜய் செய்து வருகிறார். சட்டப்பேரவை தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்கள் பட்டியல்கள் தற்போது 2 கட்டங்களாக வெளியிட்டுள்ளார் விஜய். 




இந்நிலையில், சமீபத்தில் விசிக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வெளியேறிய ஆதவ் ஆர்ஜூன தவெக கட்சியில் இணைய உள்ளதாகவும், அவருக்கு முக்கிய பதவி விஜய் வழங்க உள்ளதாகவும், வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்து அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகின. அதேபோல சி.டி. நிர்மல்குமார் பெயரும் அடிபட்டது. அவர், தமிழக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநில தலைவராக இருந்தவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்த அவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்து செயல்பட்டு வந்தார். 


இந்நிலையில், இந்த இருவரும் இன்று தவெகவில் இணைந்தனர். நிர்மல் குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் அதிமுக குறித்த பதிவுகளையும் தற்போது நீக்கி விட்டார். இன்று பனையூர் அலுவலகம் வந்த ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல்குமார் இருவரும் முறைப்படி தவெகவில் இணைந்து கொண்டனர். 


இவர்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவரும், நல்ல பேச்சாளராக அறியப்படும் காளியம்மாளும் தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  தவெகவில் இப்போதுதான் முக்கியமான, முகங்கள் இணையத் தொடங்கியுள்ளன. இதனால் அக்கட்சியினர் உற்சாகமாகியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்