என் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பதே இல்லை.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

Dec 02, 2024,03:52 PM IST

சென்னை:  எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், நான் எழுப்பும் கேள்விகளுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.


ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து அங்குள்ள பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆறுதல் கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார்.




இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், இந்த புயல் மற்றும் கனமழையால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.  அதற்கு இந்த அரசு முறையாக உரிய அதிகாரிகளின் மூலம் கணக்கிட்டு பாதிக்கபட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க வேண்டும். சென்னை மாநகரத்தில் 7 சென்டிமீட்டர் மழை தான் பெய்தது. இது இயல்பாக பெய்யக்கூடிய மழை தான். இதனால் 5 அல்லது 6 மணி நேரத்தில் மழை நீர் வடிந்து விட்டது.


சென்னை மாநகரத்தில் இந்த அரசின் முயற்சியால் தான் மழை நீர் வடிந்து விட்டதாக பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள், எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார். ஒரு பிரதான எதிர்க்கட்சி தலைவராக மக்களுக்கு ஏற்படுகிற பிரச்சனையை உரிய நேரத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றோம். நான் என் கடமையை தான் செய்கின்றேன். ஆனால், ஆளும் கட்சியின் முதல்வர் அதற்கு உரிய பதில்கள் அளிப்பதில்லை. 


இன்றைக்கு இருக்கும் முதல்வர் நாங்கள் கூறும் பிரச்சினையை தீர்க்க முடியாத ஒரு முதல்வராக இருக்கிறார். எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான முறையில் புரிந்து கொண்டு அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான் ஓர் நல்ல அரசு. இதை இந்த அரசு செய்வதில்லை. 


கனமழை பெய்யும் போது எல்லாம் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தற்போது, அது ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் 2 முறை இழப்பீடு வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வங்கி கணக்கிற்கு இனி 4 பேர் வரை நாமினியாக நியமிக்கலாம் .. புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்

news

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகிறார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்.. டிச. 5ல் பதவியேற்பு

news

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்.. திடீரென கைது செய்யப்பட்டது ஏன்?.. திடுக்கிடும் தகவல்கள்!

news

சாதிவாரிக் கணக்கெடுப்பு.. தேசியத் தலைவர்கள் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

TNSTCக்கு.. 5 வருடமாக எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை.. திமுக எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில்!

news

திருக்குறளின் முப்பால்களையும் மையப்படுத்தும் படம்.. இசையமைக்க டக்கென ஒத்துக் கொண்ட இளையராஜா

news

Chennai Lakes: தொடர் மழையால் மேம்பட்ட சென்னை ஏரிகளின் நீர் இருப்பு.. சூப்பர் அப்டேட்!

news

அவசர சோறு ஆபத்து.. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 04, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்