என்னை ஏன் சந்திக்கவில்லை என்று செங்கோட்டையனிடம் கேளுங்கள்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி!

Mar 15, 2025,05:55 PM IST

சென்னை: என்னை ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள். நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை. அதிமுக சுதந்திரமாக செயல்படும் கட்சி என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.


அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த விழாவில்  எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என்று அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் விழாவை புறக்கணித்தார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.


அது மட்டுமின்றி கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போதும், செங்கோட்டையன் கலந்து கொள்லாமல் இருந்தார். இது மீண்டும் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.




இதனையடுத்து, தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது . இதில் 2025-2026ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன் திமுக சார்பில் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. அதே போல அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தமிழக சட்டசபை வளாகம் வரை வந்த செங்கோட்டையன், அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்த கொள்ளாமல் புறக்கணித்தார். 


இந்த நிலையில், வேளாண் பட்ஜெட்டை இன்று காலை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். சட்டபேரவை கூடுவதற்கு முன்பாகவே சபாநாயகர் அப்பாவுவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசினார். அப்போதும் அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்து பேசவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து பல முறை செங்கோட்டையன் சந்திப்பதை தவிர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 


இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, செங்கோட்டையன் உங்களை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வருவதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதை அவர் கிட்ட கேளுங்க. காரணம் அவரை கேட்டால் தானே தெரியும். என்னிடம் கேட்டால் எப்படி தெரியும். தனிப்பட்ட பிரச்சனையை பேசுற இடம் இது இல்லை. அவருக்கு வேலை இருக்கும். இது சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சி. திமுக மாதிரி அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. என்றைக்குமே நான் யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது. இந்த கட்சியில் இருப்பவர்கள் சுதந்திரமாக செயல்படலாம். எங்கே வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் போகலாம். எங்களுடைய ஒரே எதிரி திமுக தான் என்று தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே அதிமுக தலைமையுடன் அவருக்கு பலவிதங்களில் கருத்து வேறுபாடுகள், சலசலப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது இவர் அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தை அப்பட்டமாக்கி காட்டி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்