சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள காவல்துறை செயலற்ற நிலையில் உள்ளது. அது குற்றச்சம்பவங்களை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. தினமும் கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிப்பது தான் திமுக ஆட்சியின் சாதனையாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்றன. அதன்பின்னர் சற்று நேரத்திலேயே அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
நாங்கள் பயந்து வெளிநடப்பு செய்யவில்லை. பேச அனுமதிக்காததே காரணத்தினால் நாங்கள் வந்தோம். எங்களுடைய பேச்சை கேட்கவில்லை. பேசவும் அனுமதிக்காத காரணத்தினால் தான் வெளியே வந்தோம். பயந்து வெளியே வரவில்லை. இந்த அரசாங்கத்தை கண்டு பயந்த கட்சி அதிமுக இல்லை என்பதை பலமுறை தெரிவித்துள்ளேன்.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினர் நாடாளுமன்றத்தில் இவர்களுக்காக பேசினார்களா?. நாடாளுமன்றத்தில் இவர்கள் அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இங்கே ஷோ காமித்து ஒன்றும் ஆவதில்லை. இதெல்லாம் விளம்பரம். விளம்பர மாடல் அரசாங்கம். விளம்பரத்தில் தான் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை கண்டால் அச்சம் இல்லை. காவல்துறை செயலற்று இருக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மக்களின் பாதுகாப்பில் விளையாடக் கூடாது. குற்றம் நடக்காமல் பார்த்து கொள்வதே அரசின் கடமையாகும். தங்கம் வெள்ளி நிலவரத்தை போல் கொலை நிலவரம் வந்துவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டில் தினந்தோறும் தொடரும் கொலை சம்பவங்கள் ! தடுக்கத்தவறிய ஸ்டாலின் மாடல் அரசு ! அச்சத்தில் தமிழக மக்கள் !
●மதுரை பெருங்குடி அருகே சிவகங்கையைச் சேர்ந்த காவலர் மலையரசன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
●கோவை மதுக்கரையில் ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
●ஈரோடு நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த தம்பதியினர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டதில், கணவர் உயிரிழப்பு; மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
●சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோடாங்கி சந்தானம் என்ற குறி சொல்லும் நபர் அரிவாளால் வெட்டிக்கொலை.
அதுபோக, கடந்த 24 மணி நேரத்தில் 11 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
"சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் சொல்லிக்கொண்டு இருந்தபோது வந்த செய்திகள் இவை.
Daily Status Report கொடுப்பது போல, Daily Murder Report, Daily POCSO Report எல்லாம் கொடுக்க வைத்துள்ளது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஆகப்பெரும் சாதனை.
இதை விட கொடுமையாக சட்டம் ஒழுங்கின் நிலை தமிழ்நாட்டில் முன் எப்போதும் இருந்ததில்லை.
சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை இருக்கிறதோ என்று எண்ணதோன்றுகிறது.
"குற்றம் நடந்தால் கைது செய்கிறோம்" என்றெல்லாம் சொல்லி பொறுப்பை தட்டிக்கழிப்பது அதிகார மமதையின் உச்சம் என்றே எண்ணவும் தோன்றுகிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை என ஒன்று இருப்பதாகவோ, அத்துறையின் நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகள் அச்சப்படுவதாகவோ தெரியவில்லை; அதற்கு நாள்தோறும் பட்டப்பகலில் நடக்கும் கொலை சம்பவங்களே சாட்சி!
மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வீட்டிற்கு வந்தால் தான் உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலையில் தான் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியிம் சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
{{comments.comment}}