அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைவதற்கு சாத்தியமே இல்லை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

Mar 27, 2025,06:34 PM IST

சென்னை:  ஓபிஎஸ் உடன் இணைவதற்கு சாத்தியம் இல்லை. அதிமுக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு நேரில் வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஓபிஎஸ் உடன் இணைவதற்கு சாத்தியம் இல்லை. அதிமுக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. தமிழகப் பிரச்சனை குறித்து அமிக்ஷாவிடம் பேசினேன். 




தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும். தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். 11 மாதத்திற்கு முன்பு என்ன சொன்னாலும் நிலைக்காது. அதனால் கூட்டணி அமைக்கும் போது கட்டாயம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களை மிரட்டுவதற்கு என்ன இருக்கிறது.


அதேபோல் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தான் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பேசுகிறோம். நாங்களாக எந்த கருத்தையும் சொல்வதில்லை. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் செய்தது யார் என்பதை கண்டுபிடியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்