வெற்று அறிவிப்பு... விளம்பரத்திற்காக மட்டுமே போடப்பட்ட பட்ஜெட்: எடப்பாடி பழனிச்சாமி

Mar 14, 2025,05:26 PM IST

சென்னை: திமுக வின் பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது வெற்று அறிவிப்பு, விளம்பரத்திற்காக போடப்பட்ட பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.


இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், கடன் எவ்வளவு இருக்கு தெரியுமா?. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் கடன் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடன் வாங்கிதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூடிய நிலை இன்று உள்ளது. கடன் வாங்காமல் வருவாயை பெருக்கி அதன் மூலம் வளர்ச்சி இருந்தால் சரி. அதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த கடனை யார் கட்டுவது.


திமுகவின் பல்வேறு வாக்குறுதிகள் எதவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை அதிகமாக வழங்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்ன ஆனது?. நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.




2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை நிரப்பவே முடியாது. ஒரு ஆண்டில் எப்படி 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படுவது சாத்தியமா? கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு எங்கே? இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது வெற்று அறிவிப்பு, விளம்பரத்திற்காக போடப்பட்ட பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஈட்டிய விடுப்பு சரண் முறை மீண்டும் அமல்!

news

பெண்களுக்கு சொத்தில் உரிமை.. அது கருணாநிதி.. சொத்து வாங்கினால் 1% சலுகை.. இது முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சாமானிய மக்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக : பாஜக தலைவர் அண்ணாமலை

news

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்குடன் தமிழக பட்ஜெட்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

news

வெற்று அறிவிப்பு... விளம்பரத்திற்காக மட்டுமே போடப்பட்ட பட்ஜெட்: எடப்பாடி பழனிச்சாமி

news

Tamil Nadu Budget 2025: பள்ளி, கல்லூரிகளுக்கான அதிரடி அறிவிப்புகள்

news

கருப்பை வாய் புற்றுநோய்: 14 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

news

கல்வியை கலைஞர்மயமாக்க நினைக்கும் திமுக... டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் கடும் தாக்கு!

news

உலக தமிழ் ஆராய்ச்சி மையம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் - பட்ஜெட்டில் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்