அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி திடீர் சந்திப்பு.. எஸ்.பி.வேலுமணி, கே.பி. முனுசாமி சகிதம் சென்றார்

Mar 25, 2025,09:05 PM IST

டெல்லி: டெல்லி சென்றுள்ள முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி யாரையும் சந்திக்க வரவில்லை என்று கூறியிருந்த நிலையில் திடீரென இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்குப் போய் அவரை சந்தித்துப் பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்றிருந்தனர்.


பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக தலைவர்களும் கூறி வந்த நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்ணி வருகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.


2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்தார். அப்போது மக்களை கவரும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். மறுபுறம் வருவாய் ஈட்டக்கூடிய வகையில் எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படாமல் தற்போது அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்த முடியாது. வெற்று அறிவிப்புகள் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக பட்ஜெட்டை விமர்சித்து பேசினார். 


இதனைத் தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து துறை ரீதியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பயணமாக டெல்லி புறப்பட்டுப் போனார்.




டெல்லியில் உள்ள அதிமுக கட்டிடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தை தற்போது பார்வையிட டெல்லி சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி பாஜக மூத்த தலைவர்கள் யாரேனும் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் பிரத்யேகமாக யாரையும் தான் சந்திக்க வரவில்லை என்றும் கட்சி அலுவலகத்தைப் பார்க்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார் எடப்பாடி  பழனிச்சாமி.


இந்த நிலையில்தான் இன்று இரவு திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சென்றிருந்தனர். இந்த சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவும் இல்லை.


யார் வேண்டுமானாலும் இணையலாம் - அண்ணாமலை


பாஜக அதிமுக மீண்டும் இணைய இருப்பதாக ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இந்த சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமித்ஷா நாட்டின் உள்துறை அமைச்சர். அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். 


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். எந்தக் கட்சி வேண்டுமானாலும் வரலாம் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்