சென்னை: சட்டமன்ற வளாகத்திலேயே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முனுசாமி ஆகியோர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அப்போது, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் விழாவை புறக்கணித்தார். அதற்கு அடுத்த படியாக, கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போதும், செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்தார். இவ்வாறு செய்த செங்கோட்டையனின் செயல் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2025-2026ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன் அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தமிழக சட்டசபை வளாகம் வரை வந்த செங்கோட்டையன், அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்த கொள்ளாமல் புறக்கணித்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். சட்டபேரவை கூடுவதற்கு முன்பாகவே சபாநாயகர் அப்பாவுவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசினார்.
அப்போதும் அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்து பேசவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து பல முறை செங்கோட்டையன் சந்திப்பதை தவிர்த்தும் வந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. அதுமட்டுமின்றி செங்கோட்டையன் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதை அவர் கிட்ட கேளுங்க. காரணம் அவரை கேட்டால் தானே தெரியும். என்னிடம் கேட்டால் எப்படி தெரியும் என்று கூறினார்.
இந்நிலையில், சட்ட பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு சட்டபேரவையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்வில்லை. நேரடியாக சட்டமன்றம் வளாகத்திற்கு வந்த செங்கோட்டையனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முனுசாமி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
{{comments.comment}}