நாகை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கோவில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே ஓரடியம்பலம் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார். இவர் நாகப்பட்டினத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். இதற்காக முன்னாள் அமைச்சர் மணியன் இன்று தனது காரில் வேதாரணத்திற்கு புறப்பட்டு சென்றார்.
கார் திருப்பூண்டி- கரைநகர் இடையே வந்து கொண்டிருந்தது . அப்போது எதிர்பாராத விதமாக திடீரென காரின் குறுக்கே ஸ்கூட்டி ஒன்று வந்தது. இதனைப் பார்த்த கார் ஓட்டுநர் சுதாரித்து கொண்டு ஸ்கூட்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை வேகமாக திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கோவிலின் மதில் சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி கடுமையான சேதத்தை சந்தித்தது.
அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மறுபுறம் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்துக்கு குறித்து நாகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!
அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது ஏன் தெரியுமா?.. எடப்பாடி பழனிசாமி பலே விளக்கம்!
பத்தவச்சுட்டியே பரட்டை.. விஜய் பேச்சால் சலசலப்பு.. கப்சிப்பாக்க அதை கையில் எடுக்குமா திமுக?
Deepavali Rush: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை.. நாளை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்!
தம்பி விஜய் கூட இருக்கிற ரசிகர்களில் பாதிப் பேர்.. எனக்குதான் ஓட்டுப் போடுவாங்க.. சீமான்
இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்.. 2026ல் நமது இலக்கை அடைவோம்.. தவெகவினருக்கு விஜய் அழைப்பு!
Deepavali: தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு.. நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு!
ரூ. 98 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து.. ரூ. 426 கோடி திட்டங்களைத் திறந்து வைத்த.. முதல்வர் ஸ்டாலின்
{{comments.comment}}