புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.. ஆதித்யா எல்1!

Sep 02, 2023,11:28 AM IST

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்யும் வகையில் இந்தியா வடிவமைத்துள்ளஆதித்யா எல் 1 விண்கலம் இன்று பகல் 11.50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விண்கலம் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.


சந்திரயான் 3 திட்ட வெற்றிக்குப் பின்னர் உலகின் கவனம் இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலம் மீது படிந்துள்ளது. இது சூரியனை ஆய்வு செய்ய இந்தியா வடிவமைத்துள்ள விண்கலமாகும். விண்வெளியில்  லாக்ரேஞ்ச் 1 பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும்.





விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டு விண்வெளி ஆய்வில் ஈடுபடும் முதல் இந்திய விண்கலம் என்ற பெருமையும் ஆதித்யாவுக்குக் கிடைத்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதி குறித்த ஆய்வில் ஆதித்யா எல் 1 ஈடுபடும்.  மேலும் சூரியனைச் சுற்றியுள்ள ஹாலோ குறித்தும் அது ஆய்வு செய்யும். லாக்ரேஞ்ச் பகுதி குறித்த ஆய்வையும் ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும்.


ஆதித்யா விண்கலமானது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட விண்கலமானது, திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் கொண்டு சென்று விடப்பட்டது. இனி அங்கிருந்து விண்கலமானது, லாக்ரேன்ஜ் 1 பகுதியை நோக்கி பயணிக்கும்.  அந்த இடத்தில் பின்னர் நிலை நின்று சூரியனை ஆய்வு செய்யும்.


ஆதித்யாவை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி ராக்கெட் அதி நவீனமானதாகும். முந்தைய பிஎஸ்எல்வியை விட இது நவீனமானது. எக்எஸ்எல் வகை பிஎஸ்எல்வி ராக்கெட் இது.  இதே வகை ராக்கெட்தான் முன்பு சந்திரயான் 1 விண்கலத்தையும் விண்ணில் செலுத்த உதவியது என்பது நினைவிருக்கலாம்.  அதேபோல 2013ம் ஆண்டு மூன் ஆர்பிட்டரையும் இதுதான் விண்ணில் செலுத்தியது.


சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்