களை கட்டிய ஓணம்.. யாரெல்லாம் டிரஸ் கோட்ல வந்திருக்காங்க பாருங்க

Aug 29, 2023,03:01 PM IST
சென்னை: ஓணம் களை கட்டியுள்ள நிலையில் ஓணப் புடவையில் பிரபலங்கள் போஸ் கொடுத்து போட்டோக்கள் போட்டு சமூக வலைதளமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஓணம் வந்தாலே உற்சாகமும், பாரம்பரியமும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டு விடும். தமிழ்நாட்டில் எப்படி பொங்கல் திருவிழா சமயத்தில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுமோ அப்படித்தான் கேரளத்திலும்.



ஓணம் சமயத்தில் மொத்த குடும்பங்களும் ஒன்று சேரும். எத்தனை தூரத்தில் இருந்தாலும் வந்து சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். பாரம்பரிய உடையில் அன்று மக்கள் உற்சாகத்துடன் வளைய வருவர். குறிப்பாக கசவு எனப்படும் வெள்ளை நிறச் சேலையில் பெண்கள் விதம் விதமாக தங்களை அலங்கரித்துக் கொண்டு வரும்போதே பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும்.

கேரளத்துப் பெண்களின் இந்த கசவுப் பழக்கம் இப்போது நம்ம தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் கூட தொற்றிக் கொண்டு விட்டது. அவர்களும் ஓணம்  சமயத்தில் இதேபோன்ற சேலை அலங்காரத்துடன் வருவது வழக்கமாகியுள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி நம்ம ஊர் பிரபலங்கள் பலரும் கசவு சேலையில் சூப்பர் சூப்பராக போஸ் கொடுத்து கலக்கியுள்ளனர். விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது சமூக வலைதளங்கள். 

வர்ஷா பொல்லம்மா



வர்ஷா பொல்லம்மா பிகில் படத்தில் அறிமுகமானவர். தெலுங்கு நடிகையான வர்ஷா பொல்லம்மா அப்படத்தில் நடிப்பில் கலங்கடித்திருப்பார். இப்போது  ஓணத்தையொட்டி மலையாளிகள் பாணியில் சேலை கட்டி வாய் குவித்து கலகலப்பான போஸ் கொடுத்திருக்கிறார். எப்படி இருக்கார்.. நல்லா இருக்காரா... கமெண்ட் பண்ணுங்க.

கல்யாணி பிரியதர்ஷன்



இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன். அம்மா லிசி வழியில் நடிகையாகி விட்ட இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என எல்லா மாநில மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். நடிப்பில் பிசியாக உள்ள இவர் தனது ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி கொடுத்துள்ள போஸ் மற்றும் போட்டோக்கள்தான் இவை. அந்தப் போட்டோவைப் பார்த்துட்டு நம்ம பிரேம்ஜிக்கு ஹார்ட் எப்படி துடிக்குதுன்னு பாருங்க.. கல்யாணிக்கு நமது ஓணம் வாழ்த்துகள்!

கஸ்தூரி



இந்த ஓணம் காஸ்ட்யூம் கேமில் நம்ம நடிகை கஸ்தூரியும் கூட சேர்ந்து கலக்கியுள்ளார். அட்டகாசமான கெட்டப்பில், தலைமுடி இடுப்பு வரை புரண்டு விழ, பக்கா மலையாளி தோற்றத்தில் பூக்கோலமிடும் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் கஸ்தூரி.  ஒவ்வொரு விழாவையும் உற்சாகத்துடன் கொண்டாடும் கஸ்தூரி ஓணத்தை மட்டும் விட்டு வைப்பாரா என்ன.. சூப்பராக இருக்கிறது அவரது புகைப்படமும், ஓணம் கொண்டாட்டமும்.

மிர்ணா மேனன்



ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடிச்சாரே ஞாபகமிருக்கா.. அவர்தான்.. அவர்தான் மிர்ணா மேனன். நேட்டிவிட்டி கொஞ்சம் கூட குறையாமல் மலையாளத்துப் பெண்ணாக ஒரு பக்கா காஸ்ட்யூமில் காட்சி தருகிறார் மிர்ணா மேனன். இவரது இந்தப் புகைப்படத்துக்கு முன்னால்தான் அவரது வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.. பட்.. அதை விட இந்த புகைப்படத்தில் ரொம்ப பாந்தமாக இருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

கன்னியாகுமரி நகராட்சியானது.. மேலும் 6 நகராட்சிகளும் பிறந்தன.. வெளியானது அரசாணை.. !

news

பிறை தெரிந்தது.. சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம்.. இந்தியாவில் நாளை!

news

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்

news

Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு 2 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும்.. வானிலை மையம்

news

திமுகவிற்கு போட்டியாக யாரும் இல்லை: திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்ட பதில்!

news

இமைகளின் இசையில் இளைப்பாறி.. இதழ்களின் இடையில் .. உதயமாகிறேன் (கவிதை)

news

நிலநடுக்கம்... மியான்மரில் பலி எண்ணிக்கை 1,000த்தை கடந்தது!

news

மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில்.. விரைவில் ஆலய நுழைவுப் போராட்டம்.. சீமான் அறிவிப்பு

news

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் என டெல்லி பயணம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்