வட, தென் இந்திய சினிமா இணைந்து.. பான் இந்தியா திரைப்படதை உருவாக்க வேண்டும்.. தமன்னா

Nov 23, 2024,04:44 PM IST

மும்பை: வடக்கு, தெற்கு என்று சினிமாத் துறை பிரிந்து இருக்காமல், இருவரும் இணைந்து பான் இந்தியா படங்களை உருவாக்க வேண்டும் என்று நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.


தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள தமன்னா அரண்மனை 4 திரைப்படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் சிக்கந்தர் கா முக்தார் என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார் தமன்னா. இந்த படத்தில் இவருடன் அவினாஷ் திவாரி, ஜிம்மி ஷெர்கில், திவ்யா தத்தா மற்றும் சோயா அப்ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இந்த படம் வரும் 29ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 




இதனையடுத்து, தமன்னா திருமணத்திற்கு தயாராக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா 2025ல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு தமன்னா -விஜய் வர்மா திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தமன்னா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் கைவசம் உள்ள 2 படங்களை முடித்துவிட்டு திருமணத்திற்கு தயாராகப் போகிறாராம் தமன்னா.


இந்தப் பின்னணியில், வட மற்றும் தென் இந்திய சினிமாவில் உள்ள வேறுபாடுகளை பற்றி தமன்னா பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் சொந்த துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது சினிமாவை மேலும் அழிக்க மட்டுமே செய்திருக்கிறது. இதுதொடர்பான பழி எப்போதும் நடிகர் அல்லது நடிகைகள் மீதுதான் விழுகிறது.


வட இந்திய சினிமாத் துறையும் தென்னிந்திய சினிமாத் துறையும் ஒன்றிணைந்து ஒரு உண்மையான பான் இந்தியா திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்