புயலைக் கிளப்பிய "சன்னி லியோன்".. யார் பார்த்த வேலை இது.. டென்ஷனில் உத்தரப் பிரதேச போலீஸ்!

Feb 18, 2024,11:37 AM IST

லக்னோ: உத்தரப் பிரதேச காவல்துறை ஆளெடுப்பு தேர்வுக்கான, நுழைவுச் சீட்டில் (ஹால் டிக்கெட்) கவர்ச்சி நடிகை சன்னி லியோன் படம் இடம் பெற்றது அந்த மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


அட்மிட் கார்டில் சன்னி லியோன் படம் இடம் பெற்றது தொடர்பாக விரிவான விசாரணைக்கு யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது. 


உத்தரப் பிரதேச காவல்துறையில், காவலர் பணிக்கான ஆளெடுப்புத் தேர்வு நடைபெற்றது. இதற்கான ஹால் டிக்கெட் ஒன்றுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சன்னி லியோன் புகைப்படத்துடன் அந்த ஹால் டிக்கெட் உள்ளது.




சன்னி லியோன் என்ற பெயரிலேயே அந்த ஹால்டிக்கெட் உள்ளது. சமூக வலைதங்களில் இது பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச காவல் ஆளெடுப்பு மற்றும் பதவி உயர்வு வாரியத்தின் இணையதளம் மூலம் இந்த ஹால் டிக்கெட் பெறப்பட்டுள்ளது. நேற்று இந்த வாரியத்தின் சார்பில்  75 மாவட்டங்களில் 2385 மையங்களில் காவலர் ஆளெடுப்புத் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


கன்னாஜ் மாவட்டத்தின் தீர்வா தாலுகாவில் உள்ள திருமதி சோனிஸ்ரீ நினைவு மகளிர் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்தான் சன்னி லியோன் பெயரில் இருந்தது. கன்னாஜ் சைபர் கிரைம் போலீஸார் தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு இணையதளத்திலிருந்து இப்படி ஒரு குழப்பம் நடந்திருப்பது உ.பி. அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்