நடிகை சோனா திடீரென.. பெப்சி அசோசியேஷன் முன்பு அமர்ந்து.. தர்ணா போராட்டம்..!

Mar 24, 2025,04:03 PM IST

சென்னை: என் ஹார்ட் டிஸ்கை எடுத்து வைத்துக் கொண்டு தர மாட்டேங்குறாங்க‌. தயவுசெய்து மீடியா எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று நடிகை சோனா சென்னையில் உள்ள பெப்சி அசோசியேஷன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை சோனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஜெய் நடித்த கனிமொழி என்ற படத்தை தயாரித்திருந்தார். இப்படம் நஷ்டத்தை அடைந்தது. இதனை தொடர்ந்து அவ்வப்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். பின்னர் அவரது வாழ்க்கை கதையை மையப்படுத்தி ஸ்மோக் என்ற வெப் தொடரை தயாரித்து வந்தார். இந்த வெப்த்தொடர் தயாரிப்பது தொடர்பாகவும், அதனை வெளியிடுவதற்கு பலர் என்னை மிரட்டுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது.


இந்த நிலையில், நடிகை சோனா அசோசியேஷன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஸ்மோக் வெப் தொடரின் ஹார்ட் டிஸ்கை எடுத்து வைத்துக்கொண்டு தர மறுக்கிறது. இதனால் மீடியா எனக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என உருக்கமாக  பேசியுள்ளார்.




இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, எல்லோருக்கும் வணக்கம். நான் சோனா பேசுகிறேன். இந்த சினிமா துறையில் கடந்த 25 வருடமாக இருக்கிறேன். ஆனா பத்து வருடமாக என்னை வேலை செய்ய விடுகிறது இல்லை. ஒரே ஒரு தடவை நான் என் மேல் ஒருத்தன் கையை வைத்து விட்டான் என கூறிவிட்டேன்.

 அதனால் இத்தனை வருடமாக என்னை அமைதியாக இருக்க வைத்து விட்டார்கள். இதுதான் நடக்கும் என்று நானும் ஒதுங்கி விட்டேன். அதற்கு அப்புறம் மலையாள திரைப்படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்திற்கு பிறகு நானே ஒரு ott பிளாட்பார்மை செட் பண்ணி, ப்ராஜெக்ட் சயின்ஸ் செய்து பூஜை போட்ட நாளிலிருந்தே என்னை அடிக்கிறார்கள். எல்லா இடத்திலும் பிரச்சினை பிரச்சனை பிரச்சனை. மிரட்டல் என எல்லாம் நடக்கிறது. அதையும் மீறி ஒவ்வொன்றாக தாண்டி எல்லா பிரச்சனையும் கடந்து ப்ராஜெக்ட்டை முடித்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். 


இரண்டாவது செட்யூலில் ஒரு மேனேஜரை வைத்திருந்தோம். நல்ல மேனேஜர் இரண்டு படத்தில் பணியாற்றிய மேனேஜர். தெரிந்த நபர் நம்பிக்கையான நபர் என நினைத்து இணைந்தேன். அவர் ஐந்து, ஆறு நாளுக்கான பேமெண்டை என்னிடம் வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு கொடுக்காமல் எல்லாரிடமும் கையெழுத்து வாங்கி இருக்கிறார். எல்லோரும் காசு வாங்காமல் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார்கள். ‌ ரெண்டு ஹார்ட் டிஸ்கை தூக்கி கேமரா யூனிட் ஆளுங்க கிட்ட கொடுத்துவிட்டு நீங்க ஹார்ட் டிஸ்க் வச்சிக்கோங்க. நான் பேமெண்ட் கொடுத்து விட்டே வாங்கிக் கொள்கிறேன். மேடம்க்கு நெருக்கடியான டைம். ஹார்ட் டிஸ்கையும் அவங்களிடமே கொடுத்துவிட்டு இவர் மாட்டின உடனேயே ஒரு மாதம் நான் சமாளிக்க பார்த்தேன். ஆனால் என்னால் சமாளிக்க முடியவில்லை. பெப்ஸியில் கம்பளைண்ட் கொடுத்தேன். அப்புறம் மேனேஜர் யூனியனிலும் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். பெப்சியும் சரி மேனேஜர் யூனியனிலும் சரி இரண்டு நாட்களாக சொல்லுங்கமா கண்டிப்பாக நாங்கள் உதவி செய்கிறோம் எனக் கூறி பஞ்சாயத்து செய்ய உட்கார்ந்தார்கள். ஆமாம்மா அவன் ஃபுல்லாக ஏமாத்தி விட்டான். அவனால் தர முடியாது. நீயும் சூட்டிங் போகக்கூடாது‌. ஆனா நீங்க தாம்மா எல்லோருக்கும் பணத்தை செட்டில்மென்ட் பண்ண வேண்டும். அப்படின்னு சொல்லி இந்த பிரச்சனை கொஞ்ச நாட்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. 


அதையும் மீறி நான் ப்ரொடியூசர் கவுன்சில்ல  போய் இன்பார்ம் பண்ணி பிரச்சனையை முடித்துவிட்டு வந்து விட்டேன். எல்லாத்தையும் கொடுத்து முடித்த பிறகும் எல்லா ப்ரமோஷங்களையும் ஸ்டார்ட் பண்ணி இன்டர்வியூகள் எல்லாம் கொடுக்க தொடங்கி விட்ட பிறகும் ஒரு ஹார்ட் டிஸ்க் பிடித்து வைத்துக் கொண்டு கொடுக்கவே மாட்டேங்கிறாங்க. நானும் என்னவெல்லாம் செய்து பார்த்து விட்டேன். கிண்டலாக பேசுகிறார்கள். கேவலமாக பேசுகிறார்கள். பத்து வருடத்துக்கு முன்னாடி எடுத்த ப்ராஜெக்ட் எந்த குப்பைத்தொட்டியில் இருக்குனு தெரியல, தேட வேண்டும் அப்படின்னு சொல்றாங்க. ஹார்ட் டிஸ்க் இருந்தால் அவர் என்கிட்ட என்ன சொல்கிறார் என்றால் ரைட் மேன் யூனியன் மிரட்டி பிடுங்கி  சென்று விட்டார்கள் எனக்கூறி ஒரு நம்பரை கொடுத்தார். அந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணா கோபால்னு ஒருத்தவரு ரொம்ப அசால்ட் ஆக கேவலப்படுத்துற மாதிரி பேசுகிறார். ஆபீஸ்ல ரொம்ப பிசி டைம் இருக்குறப்ப சொல்ற நீ மொத போனை வைப்பா என இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது கடந்த ஒரு வாரமாக.


நானும் ஒரு வாரமாக என்னென்னமோ சொல்லி பாத்துட்டேன். கடைசியாக செத்து விடுவேன் என்று கூட நான் கூறிவிட்டேன். அதையும் மீறி மதிக்க மாட்டேங்குறாங்க. கொடுக்க மாட்டேங்கிறாங்க. இதுக்கு மேல நான் என்ன பண்றது என்று தெரியவில்லை. நான் இப்போது ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். நான் பெப்சி முன்னாடி உட்கார்ந்து இருக்கிறேன். நான் இங்கதான் உட்காருவேன். சங்கர் என்ற ஒரு பெரிய பிராடு, சொல்கிறது அவன் ஏமாற்றி விட்டான் என்று. ஆனால் அவனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார்கள். அதுதான் என்னவென்று புரியவில்லை. நான் அவனை வாரத்திற்கு ஒரு முறை இரண்டு முறை பார்த்து ரோட்டில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவன் நல்லா சுத்தி கொண்டுதான் இருக்கிறான். அவன் வேலையை அவன் கரெக்டா பண்ணி கொண்டு போய்கிட்டு இருக்கான். 


ஆனால் நான் ஒரு வருடமாக மாத்தி மாத்தி பிச்சை எடுக்காத குறையாக எல்லாருடைய கால் கையிலும் விழுந்து நான் பண்ணும் போது ஏற்கனவே நான் 45,000 கொடுக்க வேண்டிய இடத்தில், இப்போ ஒரு லட்சத்து 20 ஆயிரம் கேட்கிறார்கள். இப்படி ஒவ்வொரு யூனிட்டும் ஒவ்வொரு நேரத்திலையும் பேசுறாங்க. பெப்சின்றது எங்கள பாதுகாக்க கூடிய ஒரு கவுன்சில். ஆனால் அவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்றால் மேனேஜர் ஏமாத்திட்டான் தெரிஞ்ச பிறகும் எல்லாரையும் என் வீட்டுக்கு அனுப்புறாங்க. நான் தனியா தங்குகிறேன் தெரியும். தனியா தங்கும்போது இவ்வளவு பேரையும் அங்கு அனுப்பி, அவர்கள் உடனே கத்தி நான் மேனேஜர் யூனியன்ல போன் பண்ணி ஏன்னா இப்படி எல்லாம் பண்றாங்க அப்படின்னு கேட்டா திமிரா இதே வார்த்தையை சொல்கிறார்கள். நீதான் தைரியமான பொம்பளையாச்சே எதுவா இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன் போய் நிற்பையே தில்லு இருந்தா போலீஸ் ஸ்டேஷன் போ. என்னால எதையும் செய்ய முடியாது. 


நாங்கள் இப்படித்தான் பண்ணுவோம் அப்படின்னு கூறி போனை வைக்கிறாங்க. இந்த மாதிரி இப்படியே அராஜகம் பண்ணிக் கொண்டிருந்தால் நான் எதுக்குங்க இந்த யூனியன் அந்த யூனியன் என்று காசு கொடுத்து வைத்திருக்கிறோம். சம்பாதிக்கும் போது யூனியனுக்கு சும்மா காசு, 2010ல் இதே  லைட் யூனியனுக்கும் இரண்டு லட்சம் மூன்று லட்சம் கொடுத்து இருக்கிறேன்.  யாருக்குமே ஒரு நன்றி விசுவாசம் இல்லை. எவனோ ஒருத்தன் சொல்கிறான் என்று எல்லாத்தையும் பண்றாங்களே இதற்கு அர்த்தம் என்ன என்று புரியவில்லை. இதெல்லாம் நான் ரொம்ப ஓவரா யோசிக்கிறேன் அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. அப்படின்னா ஏன் பெப்சி எனக்கு ஹெல்ப் பண்ணி இந்த விஷயத்தை தீர்வு பண்ண மாட்டேங்கிறாங்க. அதுவரைக்கும் நார்மலா பேசுகிற எல்லாருமே இந்த விஷயத்தை எடுத்த உடனேயே எல்லோரும் என் ஃபோனை அவாய்ட் பண்றாங்க. இங்க போனா நாளைக்கு வா, அங்க போனா நாளானைக்கு வா என்று எத்தனை இடத்திற்கு நான் ஏறி இறங்க வேண்டும். 


நான் திருப்பி திருப்பி சொல்றேன் நான் தனி பெண். இதுக்கு மேல என்னால முடியவில்லை. நான் பெப்சி முன்னாடி உட்காருகிறேன். நான் அக்கவுண்ட் பேப்பரோட உட்கார்ந்து இருக்கிறேன். சங்கரன் என்ற நபரை அழைத்து வந்து அந்த அமௌன்ட் கிளியர் பண்றதுதான் அவங்களுடைய வேலை. அடுத்தது எனக்கு ஹார்ட் டிஸ்க் வந்தாக வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் டெய்லி இங்கே வருவேன். என்னால் முடிந்தவரை இங்க வந்து உட்காருவேன். அதையும் மீறி முடியவில்லையென்றால் இங்கே உட்கார்ந்து செத்து விடுவேன். ஆனா எனக்கு இது ரெண்டும் வேணும். நான் என்ன தப்பு பண்ணேன். பெப்சி என்று சொல்லிக்கொண்டு இந்த காசை இதில் போட்டது தானே தப்பு. பைத்தியக்காரி நான். முதலில் நான் யோசித்து இருந்தேன் நான் வெளியே ஆள பயன்படுத்தி இந்த ப்ராஜெக்ட் செய்திருந்தால், இந்த பிரச்சினையே கிடையாது. இது நம்ம குடும்பம் நம்ம சினிமா குடும்பம் நினைத்து இப்படி பண்றதுனால எனக்கு இவ்வளவு அவஸ்தை.


 எனக்கு நீதி வேண்டும். நியாய வேண்டும். மீடியா முன்பு கேட்க வேண்டிய ஒரே ஒரு கோரிக்கை என்னவென்றால் தயவு செய்து எனக்கு சப்போர்ட் பண்ணுங்க. இந்த விஷயத்தை எடுத்து எல்லோருக்கும் சொல்லுங்க. ஒரு பொண்ணு என்று பார்க்காமல் இவ்வளவு பண்றாங்க. கூட ஆள் இல்லை என்ற தைரியத்தில் தானே இப்படி பண்றாங்க. யார் வேணாலும் என்கிட்ட அக்கௌன்ட்ஸ் கேளுங்க. நான் எல்லாத்தையும் காட்டுகிறேன். எல்லாத்தையும் எடுத்து வருகிறேன். கையோடு காட்டுகிறேன். ஏன் எனக்கு நியாயம் கிடைக்க மாட்டேங்குது. எனக்கு இதுக்கு மேல என்ன வழி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. உனக்கு தில் இருந்தா போலீஸ் ஸ்டேஷன் போ நீ போலீஸ் ஸ்டேஷன் போனாலும் அவங்க என்கிட்ட தான் அனுப்பிச்சு விடுவாங்க எங்க டேபிள்தான் வரணும். அது உன்னால முடியாது என்று சவால் விடுகிறார்கள். நான் என்ன தப்பு பண்ணினேன். தயவுசெய்து வாங்க வந்து சப்போர்ட் பண்ணுங்க என உருக்கமாக பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்