அந்நியன் சதாவை ஞாபகம் இருக்கா.. எப்படி டோட்டலா மாறிப் போயிருக்கார் பாருங்களேன்!

Jul 02, 2024,12:39 PM IST

சென்னை:   ஜெயம், அந்நியன் உள்ளிட்ட  பல படங்கள் மூலம் ரசிகர்களின் அன்பை அள்ளிக் குவித்த முன்னாள் ஹீரோயின் சதா சயீத் இப்போது முழுக்க புகைப்படக் கலைஞராக மாறி அசத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் எப்போதுமே பார்க்கப் பார்க்க அலுக்காத வன விலங்குகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.


ஜெயம் படம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சதா. அதில் அவரது இயல்பான தோற்றம் மட்டுமல்லாமல் அவர் பேசிய வசனமும் கூட வெகு பிரபலமானது. போய்யா போ போ என்று அவர் பேசிய வசனம் நீண்ட காலம் பலராலும் இமிடேட் செய்யப்பட்டது. பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் நடித்த அந்நியன் படத்திலும் அசத்தியிருந்தார் சதா.




தொடர்ந்து பல படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடித்து வந்த சதா ஒரு கட்டத்தில் அப்படியே ஆளைக் காணோம். இடையில் அவர் நடிப்பையும் விட்டு விட்டார். ஆனால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தார் சதா. இந்த நிலையில்தான் இப்போது அவர் கிட்டத்தட்ட ஒரு முழு நேர வன விலங்குகள் புகைப்படக் கலைஞராக மாறி இன்னொரு பரிமாணத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார்.


அடிப்படையில் செல்லப் பிராணிகள் என்றால் சதாவுக்குக் கொள்ளைப் பிரியம். அவர் வீட்டிலேயே நிறைய நாய்களை வளர்த்து வருகிறார். இதுதவிர செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்து தனது யூடியூப் தளத்திலேயே அவர் பல வீடியோக்களைப் போட்டு வருகிறார். இந்த நிலையில்தான் அடிக்கடி வனப் பகுதிகளுக்குச் சென்று லைவாக விலங்குகளை புகைப்படம் எடுத்து அதையும் வெளியிட்டு வருகிறார். அதில் பலமுறை அவரது பயணங்கள் திரில்லாக அமைந்துள்ளதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.




புலிகளைத்தான் அதிகம் அவர் புகைப்படம் எடுத்துள்ளார். சும்மா சொல்லக் கூடாது.. அத்தனை அழகாக உள்ளன அந்த புகைப்படங்கள். அவர் எடுத்த புகைப்படங்கள் சில மேகசின்களிலும் கூட இடம் பெற்றுள்ளது. முகத்துக்கு நேராக ஒன்று பேசி முதுகில் குத்தும் மனிதர்களுக்கு விலங்குகள் எவ்வளவோ மேல்.. எதிர்த்தாலும் அன்பு காட்டினாலும் நேருக்கு நேர் அதை வெளிப்படையாக காட்டுபவை விலங்குகள் மட்டும்தான். இதனால்தானோ என்னவோ தனது அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் விலங்குகள் பக்கம் திருப்பி விட்டுள்ளாரோ சதா என்று நினைக்கத் தோன்றுகிறது.


புகைப்படக் கலை மட்டுமல்லாமல் பேஷன், மேக்கப், சமையல் கலை, டான்ஸ் என பல துறைகளிலும் அசத்திக் கொண்டிருக்கிறார் சதா.. அவரது யூடியூப் சானலைப் பார்த்தாலே தெரியும் அவரது வாழ்க்கை எத்தனை அழகாக போய்க் கொண்டிருக்கிறது என்று. முன்பொருமுறை திருமணம் குறித்து அவர் அளித்த பேட்டியில், திருமணம் சந்தோஷமானது அல்ல என்று கூறியிருந்தார் சதா என்பது நினைவிருக்கலாம். வெறும் நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு பர்பஸுடன் நடை போடும் சதாவின் லைப்ஸ்டைல் நிச்சயம் ஒரு அருமையான முன்னுதாரணம்தான்.. பெண்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே.

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்