சென்னை: கேப்டன் விஜயகாந்த்தை என்னால் மறக்கவே முடியாது. ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். ஹெல்த்தைப் பார்க்காம விட்டுட்டாரு என்று கூறி வேதனைப்பட்டுள்ளார் நடிகை ரேகா.
விஜயகாந்த்துடன் இணைந்து நடித்த நாயகியர்களில் ரேகாவும் ஒருவர். விஜயகாந்த் மறைவு குறித்து உருக்கமான கருத்துக்களை வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளார் ரேகா.
அதில் ரேகா கூறியிருப்பதாவது:
விஜயகாந்த் சாரை லாஸ்ட்ல இந்த நிலைமையில வந்து பார்க்க முடியலனு ரொம்ப கஷ்டமா இருக்கு. யோகி பாபும், நானும் கேரளா சூட்டிங்கில தான் இருக்கோம். 2 பேரும் ரொம்ப வருத்தப்பட்டோம். அவருகூட நாலு அஞ்சு படங்கள் பண்ணியிருக்கேன். எல்லாருடைய டெத்துக்கும் நா போயிருக்கேன். இந்த நேரத்துல அவரோட முகத்தை பார்க்க முடியல.
அவர் ஒரு பெரிய லெஜண்ட். அவரோட டெத்துக்கு போக முடியல ரொம்ப கவலையா இருக்கு எனக்கு. ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு. அவரோட கல்யாணத்தப்ப பயங்கரமான கிரௌடுல நான் சிக்கிகிட்டேன். அப்ப திடீர்னு ஒரு கார் எங்கிட்ட வந்து நின்னுச்சு. உள்ளே வாங்க உள்ள வாங்கன்னு சொன்னாங்க. யார்னு பார்த்தா, கல்யாண மாப்பிளையும் பெண்ணும் உள்ளே இருந்தாங்க. மேடம் மடியில தான் நான் உட்கார்ந்தேன். அப்புறம் அவங்க என்னோட கார் கிட்ட வந்து என்னை இறக்கி விட்டாங்க.
கல்யாணத்துக்கு போன என்னால அவருடைய இறப்புக்கு போக முடியல. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த ரெண்டு குழந்தைகளும் அழுறத பார்த்து ரொம்ப வருத்தமா இருக்கு. அப்படி அழுகிறார்கள். ரொம்ப ரொம்ப நல்லவரு. லீடர்ஷிப் உள்ளவரு. வெளியில் கூட ஒரு விஷயத்தை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு ரொம்ப நல்லா தெரிஞ்சவரு. அவரு கூட நாலு அஞ்சு படம் பண்ணியிருக்கேன்.
அவர் எல்லாருக்கும் நல்லா சாப்பாடு போடுவாரு. நடிகர் சங்கத்தை நல்லா கொண்டு போனாரு. ஹெல்த்தை பாக்காம விட்டுட்டாரு. ரொம்ப பெரிய வருத்தமான விஷயமா இருக்கு. ரெண்டு நாளா அவரைப் பாக்குறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. அவரோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை நான் பிரார்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ரேகா.
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}