வாவ்.. மெய் சிலிர்க்க வைத்த தொடை அழகி.. மீண்டும் வரும் அழகிய ரம்பா.. இது இவரது ஸ்டைலா!

Nov 01, 2023,10:53 AM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: வாவ் என சொல்லக்கூடிய ஸ்டைலான அழகில், அழகே பொறாமைப்படும் அளவிற்கு நேர்த்தியான உடையில் , புன்னகை முகத்துடன் தனது காந்தப் பார்வையால் போஸ் கொடுத்த போட்டோக்களை  ரம்பா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ரம்பா 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். உழவன் என்ற திரைப்படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.  இதனை அடுத்து உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தார். இதில் அழகிய லைலா.. இது இவளது ஸ்டைலா.. என்ற பாடலில் பாவாடையை காற்றில் பறக்க விட்டு  அவர் போட்ட ஆட்டத்தை இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாது.

இன்றும் இந்தப் பாடலை  2கே கிட்ஸ் ரசிகர்கள்  பாவாடையை காற்றில் பறக்கவிட்டு ரம்பா போன்று ரீல் செய்து கலாய்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தொடை அழகி என்ற பட்டம்  பெற்றார். இப்படத்தின் மூலம் திரையுலகமே திரும்பிப் பார்க்க வைத்த இவருடைய அழகு நடிப்பு ,நடனம் ,என அனைவரின் உள்ளத்தையும் அள்ளி சென்று விட்டார்.



இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா காதலா, ராசி, நினைத்தான் வந்தாய் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். கமல்,ரஜினி, விஜய், அஜித் ,என முன்னணி கதாநாயகனோடு சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி ,போஜ்புரி என பல மொழிகளில் வாய் அடைத்து போகும் அளவிற்கு பல படங்களில் நடித்திருக்கிறார். 

கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்து முடித்து திரையுலகிற்கு முழுக்கு போட்டு விட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று புகழ்பெற்றார். 2010 ஆம் ஆண்டு கன்னட தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பிறகு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன்  உள்ளனர் .மூத்த மகள் லாவண்யாவை பார்த்தால் ரம்பாவின் ஜெராக்ஸ் என்றே தெரிகிறது. தற்போது ரம்பாவுக்கு வயது 49 ஆனாலும் இன்றும் இளமையாக காட்சியளிக்கிறார்.

இந்நிலையில்  தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் .இவரை பின்தொடும் ரசிகர்கள் ஏராளம். எத்தனை வருடங்கள் ஆனாலும்   இளமை மாறாமல் அதே ஸ்டைலான அழகில் உள்ளார் .இவர் மீண்டும் நடிக்க மாட்டாரா என ஏங்கும் ரசிகர்களுக்கு மத்தியில் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றது.



ஒரு பேட்டியின்போது ரம்பா கூறுகையில், கேட்ட கேள்விகளுக்கே வலிக்காமல் நெளிவு சுழிவாக பதில் சிரித்தபடி அளித்தார். இப்பவும் உங்களுக்கு பட வாய்ப்பு வருகிறதா.. நீங்கள் தமிழில் சினிமாவில் யாருடன் நடிக்கலேனும் வருத்தம்.. என ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய ரம்பா, என் பெயரை காப்பாற்றும் வகையில் நல்ல படங்கள் வந்தால் நடிப்பேன் வாய்ப்பிற்காக போன் போட்டு நச்சரிக்க மாட்டேன் என்றும், நடிகர் விக்ரம் கூட தெலுங்கில் ஒரே படத்தில் வேறு ஜோடியாக நடித்திருக்கிறேன். ஆனால் தமிழில் ஜோடியாக நடிக்கவில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்