சென்னை: எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. அப்படி சினிமா துறையில் வாய்ப்புகள் வரும்போது 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் கால் பதிக்க ஆரம்பித்து வரும் மகிழ்ச்சியான தருணத்தை நம்முடன் பகிர்ந்து பேசியுள்ளார் பிக் பாஸ் புகழ் பூர்ணிமா ரவி.
இந்த உலகத்தில் பல்வேறு துறைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தவர்கள் ஏராளம். அப்படி திறமையானவர்கள் சாதிக்க சினிமா துறையிலும் இடம் உண்டு. சினிமா துறையில் நல்ல இடம் கிடைக்கும்போது, அதனை சரியாக பயன்படுத்த நடிகர்கள் தயங்க மாட்டார்கள்.
இப்படியாக சிறிய ரோல்கள் முதல் சவாலான பெரிய ரோல்கள் வரை நடித்து சாதித்தவர்கள் அதிகம் என்றே சொல்லலாம். அந்த வரிசையில் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தனது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைக்க ஆரம்பித்து வருகிறார் நடிகை பூர்ணிமா ரவி.
நடிகை பூர்ணிமா ரவி ஆரம்பத்தில் ஐடி துறையில் பணிபுரிந்தவர். சினிமாவில் உள்ள ஆர்வத்தால் ஆராதி என்ற youtube சேனலை ஆரம்பித்து டான்ஸ் மற்றும் பல விஷயங்களை பதிவிட்டு வந்தார். இதன் மூலம் ஒரு சிறந்த youtubeபராக அறியப்பட்டார். 2021 ஆம் ஆண்டு ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ரவி. இவர் நடிப்பில் வெளியான செவப்பி மற்றும் பல படங்களில் தனது சிறந்த நடிப்பின் திறமையால் கவனம் ஈர்த்தவர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 ரியாலிட்டி ஷோ மூலம் ஒரு கண்டஸ்டண்டாக பங்கேற்று பிரபலமானவர். இந்த நிலையில் நடிகை பூர்ணிமா ரவிக்கு தற்போது நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். அதனை நம்மிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு பிடித்த நடிகர் தனுஷ். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் தன்னை மாற்றிக் கொண்டு அதற்காக எந்த எல்லை வரைக்கும் சென்று நடிப்பது என்னை ஆச்சர்யப்பட வைத்தது. பக்கத்து வீட்டுப் பையன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கூட திரையரங்குகளில் அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள்.
இதே போன்ற நடிப்புத் திறமையை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருக்கிறது. ஹீரோயின் மெட்டீரியல் என்று சினிமாவில் எதுவும் இல்லை. படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு பெறும்போது அதற்கு 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்
சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
{{comments.comment}}