மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. எங்கேயுமே இப்படி கேட்டது இல்லை.. நடிகை நமீதா வேதனை

Aug 26, 2024,12:49 PM IST

மதுரை:    நான் நிறைய கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கேட்ட கேள்விகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டன. யாரும் என்னை இப்படி கேட்டது இல்லை. அந்த அதிகாரி ரொம்ப ரூடா, அசிங்கமா, ரொம்ப அரகண்டா பேசினாங்க. உங்க மதம் என்ன அதுக்கு சர்டிபிகேட் காமிங்கன்னு கேட்டாங்க என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை நமீதா கூறியுள்ளார்.


பாஜக உறுப்பினரும், நடிகையுமான நமீதா இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அதிகாரி ஒருவர் தன்னிடம் நீங்கள் எந்த மதம் என்றும், அதற்கு ஆதாரம் கேட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்த நடிகை நமீதா சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,




இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிருந்தேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் வித்தியாசமாக நடந்து கொண்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நான் நிறைய கோவிலுக்கு சென்று இருக்கின்றேன். யாரும் என்னை இப்படி கேட்டது இல்லை. அப்போது அந்த அதிகாரி ரொம்ப ரூடா, அசிங்கமா, ரொம்ப அரகண்டா பேசினாங்க.


உங்க மதம் என்ன அதுக்கு சர்டிபிகேட் காமிங்கன்னு கேட்டாங்க. இன்னக்கி வரைக்கும் யாரும் என்கிட்ட இப்படி கேட்து இல்லை. ஏன்னா இந்தியாவில இருக்குற எல்லாருக்கும் தெரியும். பிறப்பால் நான் ஒரு இந்து என்று. என்னுடைய கல்யாணம் கூட திருப்பதியில தான் நடந்தது. என் குழந்தையோட பேரு கூட கிருஷ்ணா, அதித்யா தான். ஒரு பெரிய அதிகாரியாக இருக்கும் அவங்களுக்கு ஒரு பிரபலமானவர்கள் கிட்ட எப்படி பேசனும்னு தெரியல. அது எனக்கு சரியாக தோன்றலை. இதற்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்கனும்னு கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்று தெரிவித்துள்ளார்.


கோவில் நிர்வாகம் மறுப்பு


இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தவறு எதுவும் நடக்கவில்லை என்றும் நடிகை நமீதாவிடம் விவரங்கள் கேட்ட பின்னர் அவர் தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்