சென்னை: நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என நடிகை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் மலையாளத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் பரிசு நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.
மாஸ்டர் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதுமே பரபரப்பாக வைத்திருக்கிறார். சோசியல் மீடியா பக்கத்தில் எப்பவுமே ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இப்படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் மாளவிகா மோகனன்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது. சக நடிகை சௌகரியமாக அக்கறையுடன் அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் யாருமில்லை என தெரிவித்திருந்தார்.
மாளவிகா தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 திரைப்படத்திலும் கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யாவுடன் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறாராம் மாளவிகா. இதை தனது எக்ஸ் தளத்திலேயே ஓப்பனாக சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். அவரின் கண்கள் அழகாக பல பாவங்களை வெளிப்படுத்தக் கூடியவை. விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கங்குவா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
{{comments.comment}}