சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் கிடையாது.. எல்லாமே மியூச்சுவல்தான்.. நடிகையின் ஸ்டேட்மென்ட்!

Sep 07, 2024,12:47 PM IST

டெல்லி: பெரிய திரையில் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பரபரப்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் சின்னத்திரையில் அது போல கிடையாது என்று ஒரு பிரபல நடிகை கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.


மலையாளத் திரையுலகில் பாலியல் சுரண்டல்கள் பெருமளவில் உள்ளதாக நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை வைத்து பல்வேறு வகையான சர்ச்சைகள், புகார்கள், வாதப் பிரதிவாதங்கள் நிலவி வருகின்றன. தமிழ், தெலுங்கு என்று ஒவ்வொரு சினிமாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பலரும் கூறி வருகின்றனர்.




கேரளாவில் பல்வேறு நடிகர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் நடிகர் நவீன் பாலி மீதான புகார் பொய்யானது என்று சக நடிகர்கள் சிலர் ஆதராங்களை வெளியிட்டு திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் பெரிய திரையில் வேண்டுமானால்  பாலியல் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் சின்னத்திரையில் அப்படி கிடையாது என்று ஒரு நடிகை கூறியுள்ளார்.


அந்த நடிகையின் பெயர் காம்யா பஞ்சாபி. இந்தி டிவி சீரியல்களில் பிரபலமானவர். இவர் ஒரு நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியின்போது சின்னத்திரையில் திறமைக்குத்தான் முதல் மரியாதை என்று தெரிவித்துள்ளார். தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:


சின்னத்திரை ரொம்ப சுத்தமாக உள்ளது. கடந்த காலத்தில் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது சுத்தமாக இருக்கிறது. இங்கு எந்தவிதமான அசிங்கத்திற்கும் இடமில்லை. இங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை, மிரட்டுவதில்லை.  ஒருவருக்கு திறமை இருந்தால், அவருக்கு ஒரு ரோல் பொருத்தமாக இருந்தால் அவருக்கு நிச்சயம் அந்த வாய்ப்பு கிடைக்கும்.  பொழுதுபோக்குத் துறையிலேயே மிகவும் பாதுகாப்பானது சின்னத்திரைதான்.




பாலியல் சுரண்டல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் இங்கு இடமில்லை. இங்கு மியூச்சுவலாக ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். சிலர் ஒருவருக்கு ஒருவர் விருப்பப்பட்டு உறவு முறைகளில் ஈடுபடலாம். அந்த அளவில்தான் இங்கு உள்ளதே தவிர, படுத்தால்தான் உனக்கு வாய்ப்பு என்று யாரும் எந்த நடிகையிடமும் மிரட்டல் விடுப்பதில்லை.


சில நடிகர்கள் பெண் பித்தர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டால் அவர்கள் உங்களிடம் வர மாட்டார்கள். சீண்ட மாட்டார்கள். விருப்பப்பட்டு போவது தனி, கட்டாயப்படுத்தி பணிய வைப்பது வேறு. எந்த நடிகரும் எந்த நடிகையையும் இங்கு கட்டாயப்படுத்துவதில்லை. விருப்பப்பட்டவர்களுடன் மட்டுமே அவர்கள் உறவுகளில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் நோ சொன்னால் நோதான். அதைத் தாண்டி இங்கு யாரும் வர மாட்டார்கள் என்றார் அவர்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரகசியமாக நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்...வாழ்த்து மழையில் நனைந்த தம்பதிகள்..!

news

கூட்டணி தொடருமா?...முதல்வருடன் பேசியது என்ன?...திருமாவளவன் அளித்த பளிச் பதில்

news

மறுபடியும் வந்துட்டோம்...புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் லெஜண்ட் சரவணன்

news

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு...கைதானவர் சிறையில் தற்கொலை

news

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்..!

news

கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டில்லியின் அடுத்த முதல்வர் யார்?

news

மதுவிலக்கால் கூட்டணியில் பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்...திருமாவளவன் அதிரடி

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம்... சவரன் ரூ.55,000ஐ தாண்டியது

news

அக்டோபர் 3வது வாரத்தில் விஜய் கட்சி மாநாடு? அனுமதி கேட்டு மீண்டும் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்