சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தை இணைந்து பார்த்த நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பாராட்டியுள்ளனர். சாய் பல்லவியின் நடிப்பை ஜோதிகா வெகுவாக புகழ்ந்துள்ளது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ல்லலு, ஸ்ரீகுமார், உமைர், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் அமரன். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது தான் அமரன்.
இப்படம் நான்கு நாட்களில் 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அமரன் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், அமரன் படத்தை குடும்பமாக பார்த்த சூர்யா மற்றும் ஜோதிகாவும் பாராட்டி தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், அமரன் மிகவும் பிடித்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் ரெபெக்காவின் உண்மையான உலகத்தைக் காண முடிந்தது. படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களின் இதயத்தின் ஒரு பகுதியை இப்படத்திற்காக அர்ப்பணித்துள்ளனர் என்று தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகா வெளியிட்ட பதிவில், அமரன் திரைப்படத்திற்கும் படக்குழுவிற்கும் சல்யூட். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு அற்புதமான வைரத்தை உருவாக்கியிருக்கிறார். நடிகை சாய் பல்லவி இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எவ்வளவு சவால்களை எதிர்கொண்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது. கடைசி 10 நிமிடத்தில் என் மூச்சே நின்றுவிட்டது. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்து ரெபெக்கா வர்கீஸின் பாசிட்டிவிட்டி எங்கள் அனைவரது இதயத்தையும் தொட்டிருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் எங்களை சுற்றி இருக்கிறார். உங்களது வீரத்தை ஒவ்வொரு குடிமகனும் கொண்டாடுகிறார்கள். உங்களைப் போலவே எங்கள் குழந்தைகளையும் பெருமையாக நாங்கள் வளர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
{{comments.comment}}