மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினி வயலில் இறங்கி கதிர் அறுத்து போஸ் கொடுத்து கலக்கினார்.
பழம்பெரும் நடிகை ஹேமமாலினி பாஜகவில் இருக்கிறார். அவர் மதுரா தொகுதியின் எம்பி யாக இருக்கிறார். மீண்டும் அதே மதுரா தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகை ஹேமமாலினி அங்குள்ள வயல் வயல்வெளி ஒன்றுக்கு சென்று அங்கு கதிர் அறுப்பில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேசினார். அவர்களிடம் வாக்கு கேட்டார். அதன் பின்னர் அவர்களுடன் இறங்கி அவரும் கதிர் அறுத்து அதை தூக்கி மேலே காட்டியபடி போஸ் கொடுத்தும் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கியும் கட்டி அனைத்தும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் கடந்த பத்து வருடங்களாக இவர்களை நான் சந்தித்து வருகிறேன். தொடர்ந்து இவர்களுடன் நான் பேசி வருகிறேன். இவர்களுக்கு நான் புதிதல்ல, அதேபோல் எனக்கும் இவர்கள் புதிது அல்ல. இவர்களுடன் பேசி மகிழ்வது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். இப்போதும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்த பகுதிக்கு வந்த போது இவர்களை சந்தித்து பேசினேன். அப்போது எங்களுடன் இறங்கி கதிர் அறுங்கள் என்று அவர்கள் அன்போடு கேட்டுக்கொண்டனர். அதேபோல் அவர்கள் அறுத்து வைத்திருந்த கதிரை எடுத்து கையில் வைத்துக்கொண்டு போஸ் தருமாறும் அன்போடும் கட்டளையிட்டனர். எனவே அவர்களின் விருப்பப்படி நான் செய்து மகிழ்ந்தேன் என்று கூறியுள்ளார்.
நடிகை ஹேமமாலினி மீண்டும் மதுரா தொகுதியில் எம் பியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜகவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். முக்கிய தலைவர்கள் வரிசையில் ஹேமமாலினி ஒருவர் என்பதால் அவரது வெற்றி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}