குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கிறார் ஹன்சிகா.. அண்ணி கொடுத்த புகார்.. போலீஸ் விசாரணை!

Jan 08, 2025,04:24 PM IST

சென்னை: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணன் மனைவி முஸ்கான் நான்சி புகார் கொடுத்துள்ளார்.  இதையடுத்து ஹன்சிகா மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிகை குஷ்பு சாயலில் இருப்பதால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.பிறகு எங்கேயும் எப்போதும், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆம்பள, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னனி நட்சத்திரங்களுடன்  நடித்து புகழ்பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.




நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோட்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கான் நான்சிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் வாழ்ந்த பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கான் நான்சி  போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் ஹன்சிகா மோத்வானியும் அவரது தாயார் மோனா மோத்வானியும்  என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு எனக்கும் என் கணவருக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். ஹன்சிகா மோத்வானி, அவரது தாயார் மற்றும் சகோதரர் மூவரும்  என்னிடமிருந்து விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை கேட்கிறார்கள். சொத்து முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். 


இதுகுறித்து மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில்  ஹன்சிகா குடும்பத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்