மதுரை: என்ன சொல்லுங்க.. நம்ம தமிழ்நாடு போல வருமா.. அதிலும் மதுரை போல வரவே வராதுங்க.. அட இதை நாம சொல்லலிங்க.. ஹன்சிகா மோத்வானிதான் சொல்லாமல் சொல்லியுள்ளார்.
மும்பைப் பெண்ணான ஹன்சிகா, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய ரவுண்டு வந்தவர். முன்னணி இளம் நாயகர்கள் அனைவரோடும் இணைந்து கலக்கியவர். தமிழ்நாட்டு மருமகளாகப் போகிறார் என்றெல்லாம் கூட கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்ப் படங்களில் ஹன்சிகாவைக் காணவில்லை. கிட்டத்தட்ட ரசிகர்கள் அவரை மறந்து விட்டனர். ஆனால் ஹன்சிகா தமிழ்நாட்டை மறக்கவில்லை. தனது குடும்பத்தோடு மதுரைக்கு வந்தவர் அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பச்சைப் பட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சார்த்தினார்.
கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் முடித்த கையோடு ஒரு ஹோட்டலுக்கும் சென்று குடும்பத்தோடு மதுரை ஸ்டைல் சாப்பாட்டை சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு என்று கூறி மகிழ்ந்துள்ளார்..
அதில் இட்லி, தோசை, தேங்காய் சட்னியை ஒரு பிடி பிடிக்கிறார். கடைசியாக பில்டர் காபியையும் ரசித்து சுவைக்கிறார்.. சூப்பரா இருக்கு என்று புன்னகைத்தபடி கூறும் வீடியோவைப் போட்டு மகிழ்ந்துள்ளார் ஹன்சிகா.. மீனாட்சியைப் பார்த்தாச்சுல்ல.. இனி எல்லாமே ஹேப்பிதான் ஹன்சிகா!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}