வாய்ப்பே இல்லை.. பாஜகவுடன் இனி மேல் கூட்டணியே கிடையாது.. அடித்துச் சொல்லும் அதிமுக கெளதமி

Apr 06, 2024,11:56 AM IST

சென்னை: அதிமுகவுக்கு, பாஜகவுடன் இனிமேல் கூட்டணி கிடையாது என்று நடிகை கெளதமி கூறியுள்ளார்.


பாஜகவிலிருந்து விலகிய நடிகை கெளதமி தற்போது அதிமுகவில் செயல்படுகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


பிரதமர் அவர்கள் எப்போது இருந்து  இங்கு அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார்கள். தேர்தல் அறிவித்த பிறகு தான் அவர் அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார். அதற்கு முன்னர் அவர் எத்தனை வருடம் ஆட்சியில் இருந்திருக்கிறார். 10 வருடம் அவர் ஆட்சியில் இருந்துள்ளார். இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மேலயும், தமிழ் மக்கள் மேலயும் அவ்வளவு பாசம் காட்டுகிறார் என்றால், கண்டிப்பாக அதில் ஒரு உள்நோக்கம் இருக்கும் என்பதனை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். 




அனைவரும் புரிந்தும் கொண்டார்கள். பொதுமக்கள் பாரமர மக்கள் புரிந்து கொண்டார்கள். இணையதளம் என்றாலும், மக்கள் மத்தியில் என்றாலும் ஒரு நாலு பேருக்கிட்ட கேட்டாலே தெரிந்து விடும். மக்கள் இந்த விஷயத்துல தெளிவாக இருக்கிறார்கள். சந்தேகமே வேண்டாம். நம்ம எதிர்பார்த்த வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். 


தேர்தலுக்கு அப்புறம் கூட்டணியில் சேர்வது என்பது ஒரு எடுபடாத பேச்சு. எடப்பாடி அண்ணன் அவர்கள் பல மாதங்களுக்கு முன்னர் தேர்தல் தொலை தூரத்தில்  இருக்கும் போதே தமிழ் நாட்டின் மானம் மட்டும் இல்லாமல், கட்சியின் ஒவ்வொரு தொண்டரனின், அடி தொண்டனின் விருப்பம் என்று சொல்லி பல காரணங்கள் சொல்லி இருக்காங்க. காரணங்களை பல தடவை விளக்கி சொல்லி இருக்கிறார். சந்தேகமே இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்