"இது வரை "இருபத்தைந்து".. போதும்.. நிப்பாட்டிக்கறேன்".. ரசிகர்களை ஏமாற்றிய பாத்திமா பாபு!

Dec 25, 2023,05:43 PM IST

சென்னை: முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமா பாபு தனது முகநூலில் போட்டு வந்த பிளஸ் 18 பதிவுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் அதை விரும்பிப் படித்து வந்த ரசிகர்கள் அச்சச்சோ நிறுத்தாதீங்க என்று ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளனர்.


ஆனால் நிறுத்திக் கொள்வதாக அறிவித்த கையோடு இன்று இன்னோரு ஜோக்கைப் போட்டு ரசிகர்களின் மனதைக் குளிர வைத்து விட்டார்.


அந்தக் காலத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்களில் மிக மிகப் பிரபலமானவர் ஷோபனா ரவி.. இவரது செய்தி வாசிப்பு ஸ்டைலுக்கும், வார்த்தை உச்சரிப்புக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. சிரிக்கவே மாட்டார்.. தனது பாணி உச்சரிப்பிலிருந்து விலகவும் மாட்டார். பலரும் அதை விமர்சித்தாலும் கூட தனது நிலையிலிருந்து பின்வாங்கியதே இல்லை.




ஷோபனா ரவி போல பலர் அப்போது இருந்தாலும் பாத்திமா பாபு அவர்களில் தனித்து விளங்கினார். அவரது ஸ்டைலும் தனித்துவமானது. அவரது புன்னகை பூத்த முகம், தலை நிறைய வைத்திருக்கும் மல்லிப் பூ.. மலர்ச்சியுடன் பேசும் ஸ்டைல் என்று பாத்திமா பாபுவுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.


பின்னர் நடிகையாக மாறினார் பாத்திமா பாபு. நிறைய சீரியல்கள், திரைப்படங்களில் நடித்துள்ளார். இடையே பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார். இப்போது ரீல்ஸ் போடுவதில் மிக மிக பிசியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது முகநூலில் பிளஸ் 18 ஜோக்குகளை எழுத ஆரம்பித்தார். இவராக எழுதியதில்லை.. ஆங்கிலத்தில் வந்ததன் மொழியாக்கம், ஏற்கனவே வந்தவை என்று தொகுத்து ஒவ்வொன்றாக போட ஆரம்பித்தார்.


இதற்கு இரு விதமான கருத்துக்கள், விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.. நல்லாருக்கு, போல்டா இருக்கு.. உங்க தைரியத்தைப் பாராட்டுகிறோம் என்று பலரும், இதெல்லாம் எதுக்கு மேடம் உங்களுக்கு , பெயரைக் கெடுத்துக்காதீங்க என்று சிலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.


அதற்கு பாத்திமா பாபு சூப்பராக பதிலளித்தார்.. நான் எனது ஜோக்கைப் போடும்போதே, பிடிச்சா படிங்க.. பிடிக்காதவங்க படிக்காதீங்கன்னு தெளிவா போட்டுத்தானே போடறேன். விருப்பம் இருந்தா படிங்க.. இல்லாட்டி போய்ட்டே இருங்க என்று விளக்கம் கொடுத்து விட்டு தொடர்ந்து போட்டு வந்தார்.


இந்த நிலையில் நேற்று இரவு ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், இதுவரை இருபத்தைந்து 18+ பதிவுகள்.

போதும். நிப்பாட்டிக்கறேன் என்று கூறியிருந்தார் பாத்திமா பாபு. இதனால் அவரது ஜோக்குகளை ரசித்துப் படித்து வந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேடம் நிறுத்தாதீங்க என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.


அதைக் கேட்டு மனசு இறங்கினாரோ என்னவோ இப்போது மீண்டும் ஒரு ஜோக்கைப் பகிர்ந்துள்ளார். இது எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி பயன்படுத்தும் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்தான்.. ஆனால் அதை விமர்சித்து இன்று பதிவு போட்டுள்ளார் பாத்திமா பாபு.


இதுகுறித்து அவர் கூறுகையில், 




சுஜாதா, தான் உயிருடன் இருக்கும்வரை பல நாவல்களிலும், கட்டுரைகளிலும், சிறுகதைகளிலும் ‘சொல்கிறேன், சொல்கிறேன்....’ என்று கடைசிவரையில்  பொதுவில் சொல்லாமல் விட்ட  அசைவ ஜோக்தான் இந்த மெக்சிகோ சலவைக்காரி ஜோக் !   சுஜாதா மறைந்த பின், குமுதம் அரசு பதில்களில் ஒரு வாசகரின் வேண்டுகோளுக்கிணங்கி வெளியானது.  


இந்த முன்னுரையுடன் இருந்த அந்தக் குட்டிக் கதையில் நகைச்சுவை அறவே இல்லை. முதலில் ஒரு ஜோக் சொல்பவருக்குக் கிடைக்கும் பெரும் வெகுமதியே அதைக் கேட்பவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் தாம்.  அது குறுஞ்சிரிப்பாகவோ, வெட்கச் சிரிப்பாகவோ, வெடிச்சிரிப்பாகவோ, கண்ணில் நீர் வரும் வரையிலான சிரிப்பாகவோ அல்லது ‘ச்சீ ரொம்ப மோசம்’ இப்படி எதுவாகவும் இருக்கலாம். எழுத்து வடிவிலானாலும் உங்கள் ரசிப்பைப் பல விதங்களில் அறிய முடியும். 


நிற்க. கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா அவர்கள் நான் அவரை ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்காகப் பேட்டி எடுத்ததைச் சிலாகித்து எழுதியிருந்தார். பிற தொகுப்பாளர்கள் போல் அல்ல ஃபாத்திமா, உங்கள் பதில்களை உன்னிப்பாகக் கவனித்து உரையாடுகிறார் - இந்த ரீதியில் அவர் எழுதிச் சென்றது அவர் காலமான பிறகு எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது.


அந்தப் பேட்டிக்குப் பின் அவருடன் இயல்பாக உரையாடியபோது இந்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் பற்றி பேச்சு வந்தது. எனக்கும் அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் அவரின் லட்சக்கணக்கான வாசகர்களைப் போல. குறும்பாகப் பார்த்தபடி ‘ஐயையோ அது ரொம்ப பயங்கரமான ஜோக்’ என்று சொல்கையில் அவருக்கே அடக்க முடியாத சிரிப்பு.  பிறகு, “அப்படி ஒரு ஜோக்கே  கிடையாது. அது வாசகர்களின் ஆர்வத்தை எகிறச் செய்வதற்காகச் சொன்னது”, என்று கூறி விடை பெற்றார். 


கீழே மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் என்ற அடையாளம் தாங்கி வந்த அந்தக் குட்டிக்கதையை இணைத்துள்ளேன். அதில் எங்கேயாவது சுஜாதாவின் - சுடர் மிகு அறிவை விடுங்கள் - சாதாராண அளவிலாவது நகைச்சுவை இருக்கிறதா? இப்படி ஒரு மொக்கையான நகைச்சுவையையா அம்மாமேதை தன் ஆயுள் முழுதும் ரகசியமாக வைத்திருப்பார்?! 


அப்படி ஒன்று இருக்குமெனில் அவரே அதைச் சொல்லி இருப்பார்.  சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை … அவர் சொல்லாதவரை நம் கற்பனையில் ‘அப்படி என்னவாக இருக்கும் அவரே சொல்ல முடியாதபடி’என்று ஒரு ஆர்வம் உண்டு பண்ணுவதற்காகச் சொல்லப்பட்ட ஜோக்கிற்கு இப்படியாக ஒரு அஸ்தமனம் ஏற்பட்டது.  படித்து உய்யுங்கள் என்று கூறியுள்ளார்.


என்ன பாக்கறீங்க.. எங்க "அந்த ஜோக்"ன்னா.. அதை பாத்திமா பாபு .. பக்கத்தில் போய் படிங்க பாஸ்!

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்