சிம்புவுடன் ஜோடி போடாமல் விட மாட்டேனே..  நடிகை தேவயானி  ஷர்மா செம சபதம்!

Jan 09, 2024,02:43 PM IST

சென்னை: வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன்.  அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அவருடன் நடிக்காமல் விட மாட்டேன் என்று நடிகை தேவயானி ஷர்மா கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.


தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. நடிகர் சிம்பு குறித்து பல்வேறு விமர்சனங்களும், கிசுகிசுக்களும் வந்தாலும் அவருக்கொன்று தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதை மறுக்க முடியாது. இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம். 




இப்போது,  ஒரு நடிகை இவருடன் நடிப்பதை தன் லட்சிம் என்றே கூறியுள்ளார். யார்ரா அது என்று கூட்டத்தை விலக்கிப் பார்த்தால்.. அட நம்ம தேவயானி ஷர்மா!


டெல்லியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தேவயானி ஷர்மா. ஹிந்தி  மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் 

வலம் வந்து கொண்டு இருப்பவர்.   2021 ஆம் ஆண்டு, ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில்  தேர்ச்சி பெற்றிருக்கிறார்.  இவர்தான் சிம்புவுடன் சேர துடித்துக் கொண்டிருக்கிறார்.




இதுகுறித்து அவர் கூறுகையில், "ஹிந்தி , தெலுங்கு என்ற  மொழிகளில் நான் படங்கள் பண்ணுனாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக  மட்டுமில்லாமல்,  என் நடிப்புத் திறனை முழுவதும்  செயல்படுத்தி  மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும்.


கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள்,  இவர்கள்தான் எனக்கு  முன்னுதாரணம்.  வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன்,  அதற்கான வேலையும் தொடங்கி விட்டது.  அதுமட்டுமின்றி மக்கள்  நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து  என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும் என்று கூறியுள்ளார்.




பயங்கரமான சபதமா இருக்கேம்மா.. பார்க்கலாம்.. யாரு ஜெயிக்கிறாங்கன்னு.. யாரு ஜெயிச்சாலும் லாபம்தான்.. ரசிகர்களுக்கு!

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்