சென்னை: தமிழில் டாடா படத்தில் நடித்த அபர்ணா தாஸ், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போலை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்தவர் அபர்ணா தாஸ். நான் பிரகாஷ் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக மனோகரம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதன் பின்னர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் சின்ன ரோலில் அறிமுகமானார். அதன் பின்னர் டாடா படத்தில் நடித்தார். டாடா படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழ் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்தார்.
மலையாள மொழியில் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்ற படம் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் சின்ன பட்ஜெட் படம் என்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் இந்தப் படத்தைக் கொண்டாடித் தீர்த்து விட்டனர்.. அதற்குக் காரணம், அப்படத்தில் இடம் பெற்ற குணா பட ரெபரன்ஸ்கள்தான். இந்த படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவரை காதலித்து கரம் பிடித்துள்ளார் அபர்ணா தாஸ். மனோகரம் படத்தில் நடித்த போது இவ்விருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் கேரள முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்களும் தற்பொழுது இணையத்தில் பரவி வருவதால் இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாளை கொச்சியில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுக உட்கட்சி விவகாரம்.. மகன் துரை வைகோ எம்.பியை சமாதானம் செய்யும் வைகோ!
அச்சச்சோ .. நான் கூட டெங்கு கொசுவோன்னு நினைச்சுப் பயந்துட்டேங்க!
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
உ.பிக்கு என்னாச்சு?.. ஒரே எஸ்கேப்பா இருக்கே.. மகளின் மாமனாருடன் தலைமறைவான பெண்!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
76 ல் ஷாவால்தான் திராவிட மாடல் ஆட்சி கலைக்கப்பட்டது: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
{{comments.comment}}