சென்னை: புயல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளுக்கு முதல் கட்டமாக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக நடிகர் சூர்யா கார்த்திக் அறிவித்துள்ளனர்.
தங்களது ரசிகர்கள் மன்றம் மூலமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி சென்னையையே புரட்டிப்போட்டு விட்ட மிக்ஜாம் புயலால் சென்னை வாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கன மழைக்கு இதுவரை ஏழு பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஞாயிறு இரவு முழுவதும் பெய்து வந்த மழையால் நகரின் பல பகுதியின் சாலைகளில் வெள்ள நீர் நிரம்பி நின்றன. சென்னையில் முக்கிய பகுதிகலான நுங்கம்பாக்கம், அண்ணா நகர், தி நகர், வியாசர்பாடி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, நந்தனம், திருமங்கலம், அத்திப்பட்டு உள்ளிட்ட அநேக இடங்களில் மழை நீர் முழுவதும் சூழ்ந்துள்ளது.
இதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து பெய்ததினால் அங்கும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. சென்னை மக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் முதற்கட்ட நிவாரணங்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இணைந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்கு நிவாரண முதற்கட்ட நிதியாக ரூபாய் பத்து லட்சம் உதவி தொகையை அறிவித்து உள்ளனர். தங்களது ரசிகர்கள் மன்றம் மூலமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க இருப்பதாகவும் நடிகர்கள் சூர்யா கார்த்தி தெரிவித்துள்ளனர்.
{{comments.comment}}