ஆர்ஜே. பாலாஜி இயக்கும்.. சூர்யாவின் 45 படத்தில்.. யோகி பாபு.. அப்ப டபுள் தமாக்கா கன்பர்ம் புரோ!

Dec 16, 2024,11:23 AM IST

சென்னை: ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஆர் ஜே பாலாஜி பண்பலை தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர்களிடையே அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து தீயாய் வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் காமெடியனாக கலக்கி மக்களிடையே பாராட்டு பெற்றார். இவரின் காமெடி நடிப்பிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த காமெடியை மையமாக வைத்து நானும் ரவுடிதான் படத்தில் நடித்து பல்வேறு தரப்பிலும் பாராட்டை பெற்றார். 




எல்கேஜி படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் காமெடியை மையமாகக் கொண்டு  ஜாலியான குடும்பப் பங்கான திரைப்படமாக அமைவதால் பெண் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. இவர் சித்தார்த்தை வைத்து  இயக்கிய சொர்க்கவாசல் என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. 


இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என பெயரிட்டுள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜி.கே விஷ்ணு  ஒளிப்பதிவை கையாளுகிறார். முதலில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ஏ ஆர் ரகுமான் விலகியதால், தற்போது இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.


படப்பிடிப்பு பணிகள் தற்போது கோவை பகுதிகளை சுற்றி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது பட குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் நடிகை திரிஷா நடிப்பதாக பட குழு அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து ஸ்வசிகா மற்றும் இந்திரன்ஸ் ஆகிய இரண்டு மலையாள கலைஞர்கள் சூர்யா 45 திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். 


ஸ்வாசிகா ஏற்கனவே லப்பர் பந்து படத்தில் யசோதை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே, பேராதரவை பெற்ற நிலையில் இப்படத்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட சூரரைப் போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்தது போல ஒரு போல்டானா அதிரடியான கேரக்டர் ஸ்வாசிகாவுக்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் தற்போது சூர்யா 45 திரைப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டே வருகிறது. அதாவது காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஷிவாதா  இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் சூரியுடன் கருடன் திரைப்படத்தில் நடித்தவர் என்பது நினைவிருக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

6 அல்ல 8 முறை.. பாஜக தலைவர் அண்ணாமலை.. தன்னைத் தானே.. சாட்டையால் அடித்து போராட்டம்!

news

சாட்டையும்.. புளிச்ச கீரையும்.. இப்படித்தான் செய்வார்களாம்.. தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வது ஏன்?

news

போராட எத்தனையோ வழிகள் உள்ளன.. அண்ணாமலை செய்வது கேலிக்கூத்தாக இருக்கு.. ஆர்.எஸ்.பாரதி

news

2022ம் ஆண்டில்.. ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யபிரியா.. சதீஷ் குற்றவாளி!

news

December.. எம்ஜிஆர் முதல் மன்மோகன் சிங் வரை.. மீண்டும் தனது குரூர முகத்தைக் காட்டிய டிசம்பர்!

news

சென்னையில் இன்று மாலை தொடங்குகிறது 48வது புத்தக கண்காட்சி.. ஜனவரி 12 வரை வாசிப்பு விருந்து!

news

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர்.. சிறந்த பொருளாதார மேதை.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

news

மறைந்த மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள்.. முழு அரசு மரியாதைகளுடன்.. நாளை ராஜ்காட்டில் நடைபெறும்

news

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் சென்று அஞ்சலி.. டெல்லியில்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்