நடிகர் விவேக் மறைந்து 3 ஆண்டுகள்.. மரக்கன்றுகளை நட்டு வைத்து திரையுலகினர் அஞ்சலி!

Apr 17, 2024,04:15 PM IST

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு  நடிகர் வைபவ் அஞ்சலி செலுத்தினார்.


தனக்கென்று தனி பானியை உருவாக்கி நகைச்சுவையின் மூலம் மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் விவேக். சின்ன கலைவாணர் என்ற சிறப்பு பெயருக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17ம் தேதி இறந்தார். இவரின் திடீர் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 




அப்துல் கலாமின்  வழியை பின்பற்றி பல இடங்களில் பல லட்சம் மரங்களை நட்டவர் விவேக். அவர் இறந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன. அவரின் நினைவாக பலரும் மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ். நடிகர் வைபவின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 




நடிகர் வைபவுடன், நடிகரும், விவேக்கின் மிக நெருங்கிய நண்பருமான செல்முருகனும் இணைந்து இதில் ஈடுபட்டார். மேலும் படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

அதிகம் பார்க்கும் செய்திகள்