"54 புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்திய.. ஒரே உலகநாயகன் விஜயகாந்த்".. விஷால் புகழாரம்!

Jan 20, 2024,04:15 PM IST

சென்னை:  54 புது இயக்குனர்களை அறிமுகப்படுத்திய ஒரே உலகநாயகன் விஜயகாந்த். 54 வீடுகளில் விளக்கேற்றியுள்ளார். எந்த நடிகருக்கும் இவ்வளவு தைரியம் வராது என நடிகர் சங்க செயலாளர் விஷால் மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.


புரட்சிக் கலைஞர், கேப்டன், என திரை உலகினர் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். அவர் சினிமா வாழ்க்கையில் 30 வருடங்களாக மக்களுக்கு செய்த சேவையும், அரசியலில் பெற்ற நன்மதிப்பும் மிக மிக உயர்ந்தவை. 


விஜயகாந்த் மறைந்தாலும் இவ்வுலகை விட்டு இது காலத்துக்கும் என்றும் அழியாது. அந்த வகையில் பலரின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்த சிறந்த தலைவர். இப்படிப்பட்ட இவரின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. 


இதில் கலந்து கொண்டு விஷால் பேசும்போது கூறியதாவது: 




சாமி விஜயகாந்த் அண்ணன் வாழ்ந்த பூமியில் வாழும் ஒரு மனிதனாக, இந்த கலைத்துறையில் ஒரு மேதாவி கேப்டன் விஜயகாந்த் நடித்த அதே கலைத்துறையில் ஒரு நடிகனாக, அவருடைய ரசிகனாக, அவர் இயங்கிக் கொண்டிருந்த இந்த நடிகர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக, ஒரு பொதுச் செயலாளராக தேமுதிகவிற்கு வாக்களித்த ஒரு வாக்காளராக எல்லா வகையிலும் இங்கு வந்தவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


எல்லோரும் சொல்வது போல ஒருவர் இறந்த பின்பு தான் அவரை சாமி என்று சொல்வார்கள். வாழும்போதே சில மனிதர்கள் தான் அப்படி பெயர் வாங்குவார்கள். அப்படிப்பட்டவர் தான் நம் கேப்டன். படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் சரிசமமான சாப்பாடு கிடைக்க வேண்டும் என எங்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தியவர். அவர் போட்டுக் கொடுத்த பாதையில் நாங்களும் இப்போது  முயற்சி செய்து வருகிறோம். 


விஜயகாந்த் அண்ணன் மறைவின் போது, நாங்களும் கூட இருந்து மரியாதை செலுத்தி இருக்க வேண்டும். அந்த சமயத்தில் நானும் கார்த்தியும் ஊரில் இல்லை. முதலில் அந்த குடும்பத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 


சண்முகபாண்டியனிடம் நான் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. கேப்டன் வளர்ந்து வந்த பல நடிகர்களுக்கு ஒரு தூணாக நின்று அவர்களை வளர்த்து விட்டார். உங்க வீட்டுப் பிள்ளையாக நான் சொல்கிறேன். உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் நீயும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை உனக்கு இருந்தால், நான் வருகிறேன்.. எப்படி கேப்டன் அண்ணன் பலருக்கு துணையாக நின்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்தாரோ அதேபோன்று என்னை நீ பயன்படுத்திக் கொள்வதற்கு ஆசையாக இருந்தால் நான் இருக்கிறேன் உனக்காக.. நீயும் இதே போன்று ஒரு மிகப்பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்பது எனது ஆசை. அதை நான் ஒரு பரிகாரமாகவே நினைத்துக் கொள்கிறேன். 


அவரை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தோன்றும் ஒரே விஷயம் அவரது தைரியம். எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மனதில் இருந்து தான் பேசுவார். நான் அவரை நேரில் சந்தித்தபோது அருகில் இருந்த பிரேமலதா அம்மா, நடிகர் சங்க பத்திரத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது தன்னுடைய நகைகளை எல்லாம் பீரோவில் இருந்து எடுக்க செய்துவிட்டு அந்த பத்திரத்தை பொக்கிஷமாக அதில் வைத்து பாதுகாத்தார் கேப்டன்.. அந்த அளவிற்கு சங்கத்தின் மீது ரொம்பவே ஈடுபாட்டுடன் இருந்தார் என்று கூறினார்.


அனைவரும் சொல்வது போன்று இந்த தமிழ்நாட்டில் ஒரு தலைவனை நாம் அனைவரும் மிஸ் பண்ணுகிறோம். சினிமாவில் ஈகோ இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆனால் அப்படி ஈகோ இல்லமால் இருந்த ஒருவர்தான் விஜயகாந்த். 54 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்திய ஒரே உலகநாயகன் விஜயகாந்த் தான். 54 வீடுகளில் விளக்கேற்றியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். வேறு எந்த நடிகருக்கும் இந்த தைரியம் வராது.


இயக்குனராக வேண்டும் என நினைத்தபோது, திரைப்பட கல்லூரியில் சேர வேண்டும் என்கிற ஆசை வந்ததும், இயக்குநர் ஆர்கே செல்வமணியிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்கிற எண்ணம் வந்ததற்கும் காரணம் கேப்டன் தான். எங்களைப் போன்ற நடிகர்கள் மீது புகார்கள் இருக்கும்.. ஆனால் எந்த ஒரு புகாருக்கும் ஆளாகாத நடிகர் விஜயகாந்த் ஒருவர் தான் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்