சென்னை: சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் விமல் நடிக்கும் பெல்லடோனா திரைப்படம் உருவாகிறது. இப்படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் மற்றும் ஸ்ரேயா ரெட்டி நடித்து வெளியான காஞ்சீவரம் படத்தில் துணை நடிகராக அறிமுகமானவர் நடிகர் விமல். இப்படம் தேசிய விருது வென்றது. இவர் துணை வேடத்தில் நடித்திருந்தாலும் பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து வெளியான பசங்க திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
நடிகர் விமல் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்றது. விமலின் எதார்த்தமான நடிப்பில் கலக்கி இருக்கும் திரைப்படம் தான் களவாணி. இப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென்ற பாதையை வகுத்தவர். பின்னர் கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தை தொழிலாளர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதத்தில் வாகை சூடவா படத்தில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் நடிகர் விமலுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு, பாண்டியராஜ் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, இயக்குனர் எழில் இயக்கத்தில் தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்கள் வரிசையாக நடிகர் விமலுக்கு வெற்றிகளை வாரிக்குவித்தது. அந்த வரிசையில் தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்ற தனி இடத்தை பிடித்த நடிகர் விமல் தற்போது 35 வது படத்தில் கமிட்டாகி உள்ளார்.
யூபோரியா பிளிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் விமல் நடிக்கும் திரைப்படம் தான் பெல்லடோனா. இப்படம் விமலின் 35 வது படமாகும். இப்படத்தை சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கியுள்ளார். அதேசமயம் இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் முத்துசாமியே எழுதியிருக்கிறார். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக தேஜஸ்வினி சர்மா மற்றும் மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், ஹிந்தி, மணிப்பூரி, உள்ளிட்ட 16 மொழிகளில் உருவாகி உள்ளது. மேலும் இப்படத்தின் எப்போது வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குனர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையில், இந்த படம் விமல் சாருக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மிகவும் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. இந்த கதைக்கு ஏற்றார் போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர், என அனைவரும் மிக பக்கபலமாக இருந்து உழைத்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}