தூத்துக்குடியில்.. போட் எடுத்துக் கொண்டு வீடு வீடாகப் போன அபி சரவணன் @ விஜய் விஷ்வா!

Dec 22, 2023,03:22 PM IST

- மஞ்சுளா தேவி


தூத்துக்குடி: நடிகர் அபி சரவணன் எனப்படும் விஜய் விஸ்வா தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சென்னை வெள்ளத்தின்போதும் இதேபோல செய்தார் அவர் என்பது நினைவிருக்கலாம்.


தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து மின்சாரம், குடிநீர், உணவு உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் படாத பாடுபட்டு விட்டனர்.


பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அபி சரவணன் எனப்படும் விஜய் விஷ்வாவும் உதவிகள் செய்துள்ளார். தூத்துக்குடிக்குச் சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, டூத் பேஸ்ட், பிரஷ், உடல் வலி மாத்திரைகள்,  ஓ ஆர் எஸ் குளுக்கோஸ், கோதுமை மாவு, பிஸ்கட், ஷாம்பு, நாப்கின் போன்ற பொருட்களை வழங்கினார்.




தனசேகர நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ராஜிவ் நகர் போன்ற தெருக்களில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்னும் அடிப்படை வசதியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் பொருட்களை வழங்கிய போது அவர்கள் மிகுந்த நன்றியுடன் பொருட்களை வாங்கிக் கொண்டனர் என்று கூறியுள்ளார் நடிகர் விஷ்வா


பல இடங்களில் மின்சாரமும், குடிநீரும் வராத நிலையில் மக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். 

எங்களது பயணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்பும் போது உடல்நலம் சரியில்லாத குழந்தைகள் ,வயதான மூதாட்டி, உட்பட பலரை மீட்டுக் கொண்டு வந்தோம் .அப்போது அவர்கள் இங்கிருந்து வெளியே வந்தாலும் திரும்ப செல்ல முடியாத நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 




பாம்பு, பூச்சி ,அட்டை எல்லாவற்றுடன் எங்கு பள்ளம், எங்க மேடு என்று தெரியாத நிலையில் கஷ்டப்பட்டு வருகிறோம். நம்மால் இயன்ற உதவிகளான உணவு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கியதோடு முடிந்த அளவு ஆட்களை மீட்டு வெளியில் கொண்டு வந்து விட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.




அபி சரவணன் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் அட்டக்கத்தி படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கேரள நாட்டிளம் பெண்களுடனே, சாகசம், டூரிங் டாக்கீஸ், பட்டதாரி, பிகில், மாயநதி, கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம் என பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்