தவெக சார்பில்.. கல்வி விருது வழங்கும் விழா 2.0..  அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த விஜய்!

Jul 03, 2024,10:17 AM IST

சென்னை:   தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த வாரம் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் விஜய் அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்து விட்டார். மீண்டும் ஒரு கோலாகலமான விழாவாக இது நடைபெறுகிறது.


தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் 10 மற்றும் 12 வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடந்த ஆண்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை தடுக்க இந்த வருடம் கல்வி விருது வழங்கும் விழாவை இரண்டு கட்டமாக நடத்த தமிழகம் வெற்றிக் கழகம்  திட்டமிட்டது.




அதன்படி முதற்கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த வாரம் 28ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து  இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், ஆகிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில் 725 மாணவர்கள் உட்பட மொத்தம் 3500 பேர் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த நிலையில் தமிழக கட்சி கழகம் சார்பில் நடைபெறும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இதற்காக நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அதிகாலையிலேயே மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் அதிகாலையிலேயே வந்து விட்டார். தற்போது விஜய் பேசி வருகிறார். இதையடுத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வச்சு செய்யும் குட் பேட் அக்லி.. டிராகன் வசூலைத் தாண்டியது.. தியேட்டர்களில் தொடர்ந்து செம கூட்டம்!

news

அதிக வயதில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மகேந்திர சிங் தோனி

news

அமர்நாத் யாத்திரைக்கான.. முன்பதிவு தொடங்கியது.. 533 வங்கிக் கிளைகளில் சிறப்பு ஏற்பாடு

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

news

கோடை விடுமுறை... 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

news

பழம்பெரும் கோவில்கள்.. வீரத்தின் விளை நிலம்.. கலைகளின் தாயகம்.. நம் தாய்த் திரு தமிழ் நிலம் (2)

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

அனுமதி இல்லாமல் பாட்டை பயன்படுத்திய.. அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்