மிஸ்டர் கனியன்.. ஹாய் கனியன்.. ரசிகர் மன்ற செயலாளர் மகனுக்குப் பெயர் வைத்து கொஞ்சிய விஜய் சேதுபதி!

Sep 11, 2024,04:52 PM IST

சென்னை: "மிஸ்டர்  கனியன், ஹாய் கனியன், நல்லா இரு, வாழ்க நீ " என்று  தன் ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக உள்ள குமரன் என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டி கொஞ்சினார் நடிகர் விஜய் சேதுபதி. 


மகாராஜா வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இவரது இயல்பான நடிப்பு, சாதாரணமாக பழகும் குணம் பலரையும் கவர்த்ததால் தனித்தன்மையுடன் திகழ்ந்து வருகிறார். இவரை பார்க்கும் நடிகர்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களாக இருந்தாலும் சரி பார்த்தவுடன் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்து அவர்களின் அன்பை எளிதில் பெற்று விடுவார்.




சிறு உதவி செய்தாலும் தற்போது தம்பட்டம் அடிப்பவர்களுக்கு மத்தியில், செய்யும் உதவியை வெளியில் அதிகளவில் காண்பிக்க விரும்பாதவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் ஒரு இயக்குனர் இறந்து விட்டார். அங்கு போன விஜய் சேதுபதி இயக்குனரின்  குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பணம் கொடுத்து உதவியதுடன் இதை யாரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருந்த நிலையில், இயக்குனரின் குடும்பத்தினர் அது குறித்த செய்தியை தெரிவித்துவிட்டனர். இப்படி பலர் பேர்களுக்கும் வெளியில் தெரியாமல் உதவி செய்து வருபவர் விஜய் சேதுபதி.


பல நல்ல குணநலன்களை தன்னகத்தே பெற்றுள்ள இவர், தன்னுடைய பிசியான படப்பிடிப்புக்கு மத்தியில் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்தும் வருகிறார்.இந்நிலையில், விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக உள்ள குமரன் என்பருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை மருத்துவமனைக்கே நேரில் சென்று பார்த்ததுடன், குழந்தையை வாங்கி மார்போடு அனைத்து கனியன் என பெயர் சூட்டியுள்ளார். அத்துடன் குழந்தைக்கு முத்தமிட்டு நல்லா இரு ... வாழ்க நீ என்றும், கையில்  ஏந்தியபடி கனியனை கொஞ்சி விளையாடி  வாழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்